- Home
- Lifestyle
- Ginger Tea : குளிர்காலத்துல 'இப்படி' இஞ்சி டீ போட்டு குடிங்க! சுவையா இருக்கும்; நோய்களே வராது!
Ginger Tea : குளிர்காலத்துல 'இப்படி' இஞ்சி டீ போட்டு குடிங்க! சுவையா இருக்கும்; நோய்களே வராது!
குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் சில நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Ginger Tea Benefits In Winter
இஞ்சி பொதுவாக சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இது உணவில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், இஞ்சியை தினசரி எடுத்துக் கொள்வதற்கான மற்றொரு வழி என்னவென்றால், தேநீரில் சேர்ப்பதாகும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.
Ginger Tea
பெரும்பாலும் குளிர்காலத்தில் தங்களது நாளை ஒரு கப் இஞ்சி டீயுடன் தொடங்க விரும்புகிறார்கள். இஞ்சி டீ நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர வைப்பது மட்டுமல்லாமல் பருவ கால நோய்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது. அதாவது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி இருமல் போன்ற பொதுவான பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
இஞ்சியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மாங்கனீஸ் ஃபோலிக் அமிலம் போன்றவை உள்ளன. எனவே குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பதன் நன்மைகள் :
1. சுவாச பிரச்சனை ;
குளிர்காலத்தில் ஜலதோஷத்தால் ஏற்படும் சுவாச பிரச்சனையை குறைக்க இஞ்சி பெரிது உதவும். ஒரு கப் இஞ்சி டீ குடிப்பதன் மூலம் பருவ கால தொற்றுக்களை இயற்கையாக குணப்படுத்தலாம்.
2. பருவகால நோய்கள் :
சளி, இருமல், தொண்டை புண் போன்ற பருவ கால தொற்றுக்கள் அண்டாமல் இருக்க இஞ்சி டீ உதவும். ஏனெனில் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் ஆன்டிபயாட்டிக் பண்புகள் இஞ்சியில் உள்ளன.
3. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் :
குளிர்காலத்தில் உடல் சுறுசுறுப்பாக இல்லாததால் இரத்த ஓட்டம் பலவீனமடைய தொடங்கும். இதன் விளைவாக பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இஞ்சியில் மெக்னீசியம், துத்துநாகம் போன்றவை உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
4. மன அழுத்தத்தை குறைக்கும் :
இஞ்சியில் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பண்புகள் உள்ளன. எனவே குளிர்காலத்தில் தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வந்தால் மனம் அமைதியாகி நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
5. மாதவிடாய் வலி :
மாதவிடாய் சமயத்தில் ஒரு கப் இஞ்சி டீ யில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் தசைகளையும் தளர்த்தும்.
என்னதான் குளிர்காலத்திற்கு இஞ்சி டீ உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் நெஞ்செரிச்சல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

