பணக்காரர்களின் வெற்றி ரகசியம்!! பலருக்கும் தெரியாத '5' சக்திவாய்ந்த முத்திரைகள்!!
பணக்காரர்கள், சாதனையாளர்கள் பயன்படுத்தும் சக்திவாய்ந்த 5 முத்திரைகள் குறித்து இங்கு காணலாம்.

Five Powerful Mudras : ஜப்பானிய கலாசார அனிமி சீரிஸ் (Anime series) பார்த்தால், அதில் சில தொடர்களில் முத்திரைகளை பரவலாக பயன்படுத்துவார்கள். உதாரணமாக நரூட்டோ(Naruto) சீரியஸில் பல முத்திரைகள் காட்டப்படும். இந்த முத்திரைகள் அவர்களின் ஆற்றல் நிலைகளை தூண்டி சக்தி அளிப்பதாக காட்சிப்படுத்தப்படும். அது கொஞ்சம் உண்மை தான்.
நம்முடைய ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் நமது கைகளுடன் தொடர்புள்ளது. கைகளால் சில முத்திரைகள் செய்யும்போது கைகளில் தனித்துவமான அசைவுகள் இருக்கும். அதில் கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்தும்போது உடலில் உள்ள ஆற்றல் நிலைகள், குணப்படுத்தும் செயல்முறைகள் நேரடியாகவே தூண்டப்படுகின்றன. உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பலர் கைகளில் முத்திரை செய்வதை கவனித்து பார்த்தால் தெரியும். இந்த பதிவில் பணக்காரர்கள், சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்தும் 5 சக்தி வாய்ந்த முத்திரைகளை குறித்து காணலாம்.
சின் முத்ரா:
சின் முத்ரா மூளை நரம்புகளை நன்றாக வேலை செய்ய வைக்கக்கூடிய முத்திரையாகும். இந்த முத்திரையை செய்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும். அவர்களுடைய மூளை அழுத்தத்தில் இருந்து விடுபடும். மன அழுத்தம் குறைந்து அமைதியான மனநிலையோடு காணப்படுவார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த முத்திரையை தான் பின்பற்றி வருகிறார்.
இதையும் படிங்க: எப்ப பார்த்தாலும் ரஜினி கை விரல்களை இப்படியே வச்சிருக்காரே! அதன் சீக்ரெட் தெரியுமா?
உத்தரபோதி:
விழிப்பு முத்திரை என சொல்லப்படும் உத்தரபோதி ஞானத்தைத் தூண்டக் கூடியது. இது ஒருவரின் சக்தியையும், ஆன்மீக விழிப்புணர்வையும் தூண்டும். தேவையில்லாத பயங்களை நீக்கிஉடலை நிதானப்படுத்தும் முத்திரையாகும். இழந்த சக்தியை மீட்டெடுக்க இம்முத்திரை உதவுகிறது.
இதையும் படிங்க: உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் யோகா முத்திரைகள் இவை தான்!
ஞான முத்ரா:
யோனி என சொல்லப்படும் ஞான முத்ரா நரம்பு மண்டலத்தை அமைதியாக்கும். அனைத்து புலன்களின் மீதும் அதிக கட்டுப்பாட்டை ஏற்படுத்த உங்களுக்கு உதவும் முத்திரை இதுதான். உங்களுடைய ஆழ்மன விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. மற்றவரைகளை ஈர்க்கும் வகையில் உங்களுடைய தொடர்புத் திறன்களை மேம்படுத்த இம்முத்திரை உதவும்.
காலேஸ்வரா:
ஒளிர்வு முத்திரை என சொல்லப்படும் இந்த முத்திரை எண்ணங்களை தெளிவாக்க, மெதுவாக்க உதவுகிறது. போதை பழக்கத்தில் இருந்து விடுபட உங்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவும். நினைவாற்றல் அதிகமாகும். போட்டி, பொறாமை எண்ணங்களிலிருந்து மனம் விடுபடும். கவனம் ஒருங்கிணைய உதவுகிறது.
காளி முத்திரை:
தேவையில்லா இதய சுமைகள் நீங்கும். கடினமான நாளை கடந்து செல்ல வலிமை தரும் முத்திரை. தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்.