டீன் ஏஜ் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் '4' வழிகள்!!
Self-Confidence In Teenagers : டீன் ஏஜ் குழந்தைகளுக்கு தோல்வியை சமாளிப்பதற்கும், தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
Self-Confidence In Teenagers In Tamil
பொதுவாகவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை வாழ்க்கையும் எல்லா கஷ்டத்தையும் முழு நம்பிக்கை விடனுய்6ம் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதுவும் குறிப்பாக டீன் ஏஜ் குழந்தைகளிடம் பெற்றோரின் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் டீன் ஏஜ் குழந்தைகளை கையாளுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த பருவத்தில் அவர்களை சரியாக வளர்கவில்லை என்றால், அவர்களது எதிர்காலம் மோசமாக இருக்கும்.
Self-Confidence In Teenagers In Tamil
அதுபோல இந்த டீனேஜ் வயது தான் ஆளுமையின் அடித்தளத்தை அமைக்கும் நேரம் ஆகும். இந்த வயதில் தான் தோல்வியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், தோல்வியில் இருந்து பாடத்தை எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மிகவும் அவசியம். இந்த வயதில் இருக்கும் குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருந்தால் தங்களது இலக்குகளை சிறப்பாக அடைய முடியும்.
அந்த வகையில், நீங்களும் டீன் ஏஜ் குழந்தைக்கு பெற்றோராக இருந்தால் , உங்களது குழந்தையும் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், அவர்களை சரியான வழியில் நடத்துவது மிகவும் முக்கியம். எனவே உங்கள் டீனேஜ் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க நீங்கள் இந்த சில்
விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அது என்ன என்று இங்கு காணலாம்.
இதையும் படிங்க: பெற்றோர் செய்யும் இந்த '3' தவறுகள்.. குழந்தைகள் படிப்பை பாதிக்கும்!!
Self-Confidence In Teenagers In Tamil
டீன் ஏஜ் குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ்:
1. பொதுவாக நம் பிறக்கும் போது தன்னம்பிக்கையோடு பிறப்பதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வதன் மூலம் அது மேம்படும். எனவே இன்று முதல் உன் தன்னம்பிக்கையை அதிகரிக்க முயற்சி எடு என்று உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். அதற்கு நீங்களும் அவர்களுக்கு உதவலாம்.
2. ஒருவர் செய்த சாதனையை பற்றிய தகவலை பெறுவது தன்னம்பிக்கை அதிகரிக்க செய்கிறது. எனவே உங்கள் குழந்தை ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கண்டால் அல்லது பேசினால் அதைப்பற்றி விவாதித்து அந்த திசையில் அவர்கள் செல்ல விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
3. எடுத்த உடனே பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. சிறிய காரியங்களை செய்யும் போது, அது சாதனையாக மாறும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் தான் பெரிய காரியத்தை சுலபமாக செய்வதற்கான தன்னம்பிக்கை தானாக உருவாகும்.
4. தன்னம்பிக்கை என்பது கடினமான விஷயங்களை கண்டு ஓடுவது அல்லது தவிர்ப்பது அல்ல. அவற்றை எதிர்கொள்வது தான். எனவே சவால்களை ஏற்றுக் கொண்டு உங்களால் முடிந்ததை கண்டிப்பாக முயற்சி செய் என்று உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள். இதன் மூலம் அவர்கள் இது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
Self-Confidence In Teenagers In Tamil
நினைவில் கொள்:
- பெற்றவர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தையின் எல்லா பிரச்சினைகளையும் கேட்பதற்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள் மற்றும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு நண்பர்களாக இருங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் எல்லா பிரச்சனைகளையும் தன்னம்பிக்கையுடன் சுலபமாக சமாளித்து விடுவார்கள். மேலும் உங்களிடம் எதையும் தயக்கமில்லாமல் வெளிப்படுத்துவார்கள்.
- டீன் ஏஜ் குழந்தைகள் பொதுவாக இந்த வயதில் பெற்றோர்களிடமிருந்து விலகி இருப்பார்கள். எனவே, அவர்கள் செய்யும் செயலில் அவர்களை ஊக்குவிக்கவும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளருவார்கள்.
- முக்கியமாக பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் வளரும் டீன் ஏஜ் குழந்தைக்கு முன் மாதிரியாக இருங்கள். நீங்கள் உங்கள் குழந்தையை தன்னம்பிக்கையுடன் வளர்க்க விரும்பினால் அதற்கு ஏற்றதாக நீங்கள் அவருக்கு முன்மாதிரியாக அதே வழியில் நடக்கவும்.
இதையும் படிங்க: குழந்தையை ஹாஸ்டலில் சேர்ப்பது சரியானதா? ஏன் அந்த முடிவை எடுக்கக் கூடாது தெரியுமா?