பெற்றோர் செய்யும் இந்த '3' தவறுகள்.. குழந்தைகள் படிப்பை பாதிக்கும்!!
Parenting Mistakes : உங்கள் குழந்தை படிப்பில் பின் தங்கி இருப்பதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் இதற்கு காரணம் அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
Parenting Mistakes In Tamil
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தை வளர்க்கும் போது தெரிந்த தெரியாமலோ சில தவறுகளை செய்து விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தை படிப்பில் பின்தங்கி விடுகிறார்கள்.
Parenting Mistakes In Tamil
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிள்ளையும் இதே புல படிப்பில் பின்தங்கி இருந்தால், முதலில் உங்களது வளர்ப்பில் ஏதேனும் குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிய முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தவறுகளை நீங்கள் திருத்துவதன் மூலம் உங்கள் பிள்ளை நன்றாக படிக்க ஆரம்பிக்கும். எனவே குழந்தைகள் படிப்பில் பின் தங்குவதற்கு குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!
Parenting Mistakes In Tamil
குழந்தைகள் படிப்பில் பின் தங்குவதற்கான காரணங்கள்:
ஊக்கமின்மை
குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு பெற்றோர்கள் அவர்களை நன்கு ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அப்படி செய்வதில்லை. அதற்கு மாறாக பெற்றோர்கள் குழந்தையை திட்டி அல்லது பயமுறுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால் குழந்தை படிக்க விரும்புவதில்லை. எனவே குழந்தைகள் படிக்கும் போது அவர்களை திட்டாமல் பயமுறுத்தாமல் ஊக்கப்படுத்துங்கள்.
Parenting Mistakes In Tamil
அதிக அழுத்தம்
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பை சுமையாக கருதுகிறார்கள். மேலும் இது அவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. உங்க குழந்தை படிப்பில் ஆர்வமாக இருக்க 'இத' மட்டும் செய்ங்க..!
Parenting Mistakes In Tamil
முன்னுரிமைகளை புரிந்து கொள்
பல சமயங்களில் பல பெற்றோர்கள் தங்களது குழந்தை நல்ல மதிப்பெண் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதன் காரணமாக குழந்தைக்கு மீது அதிக அழுத்தம் சுமத்தப்படுகிறது. ஆனால், குழந்தை முதலிடத்தில் வரவேண்டும் என்று கவனம் செலுத்தாமல் அவர்கள் கற்றல் மற்றும் புரிதலை ஊக்குவிக்கவும். அதுமட்டுமின்றி குழந்தை வேறு ஏதேனும் விஷயங்களில் ஆர்வமாக இருந்தால் அதில் அவர்களை ஊக்கப்படுத்தவும்.
Parenting Mistakes In Tamil
அதிகப்படியான கட்டுப்பாடு
குழந்தைகளை அதிக கட்டுப்பாடுடன் வளர்ப்பது நல்லதல்ல. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறு இதுதான். அதிக கட்டுப்பாடுடன் குழந்தை வளர்த்தால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் இருக்கும். மேலும் அவர்கள் படிப்பை படிக்க விரும்ப மாட்டார்கள். எனவே படிப்பை குழந்தைக்கு தண்டனையாக ஆக்காமல், குழந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாக விடுங்கள்.