MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Home Cleaning Tips: வீடு முழுக்க ஒட்டடை, தூசியா? ஈஸியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!

Home Cleaning Tips: வீடு முழுக்க ஒட்டடை, தூசியா? ஈஸியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!

Home Cleaning Tips: தினமும் வீட்டை சுத்தம் செய்தாலும் மூலை முடுக்குகளில் ஒட்டடையும் தூசியும் சேருகிறதா? கவலையை விடுங்க. ஈஸியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 25 2026, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Home Cleaning Tips
Image Credit : AI

Home Cleaning Tips

வீடு பெரிதோ சிறிதோ, அதைச் சுத்தமாக வைத்துக்கொள்வது பெரிய சவால். தூசி, பூச்சிகள், சிலந்தி வலை எனப் பல பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். தினமும் பல கிளீனர்களை பயன்படுத்தி வீட்டை துடைத்தாலும், இந்த தொல்லை தீரவில்லையே என்று பலரும் கவலைப்படுவார்கள். இதற்கு ஒரு சுலபமான தீர்வு இருக்கு. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, ஒட்டடை, தூசி இல்லாமலும் பார்த்துக்கொள்ளலாம். இதனால் நமது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் தேவை
Image Credit : Asianet News

வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் தேவை

வீட்டுக்குள் தூசி சேர்வதும், ஒட்டடை படிவதும் சாதாரண விஷயம்தான். ஆனால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் இந்தச் சிக்கலை தவிர்க்கலாம். வெளியில் இருந்து வரும் தூசி, வீட்டுக்குள் இருக்கிற ஃபர்னிச்சர் மூலமாகத் தூசி சேரும். கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன பூச்சிகள் வீட்டுக்குள் வரும்போது, அதைச் சாப்பிட சிலந்திகள் வலை கட்டும். இதைத் தடுக்க, வீட்டுக்குள் நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வரவேண்டும். எல்லா அறைகளுக்கும் வெளிச்சம் வந்தாலே பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

முதலில் தூசியை விரட்டுங்கள்

வீட்டுக்குள் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஃபேன், சுவர்கள், சீலிங்கில் ஒட்டியிருக்கிற தூசியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அதுக்கப்புறம் டீப்பாய், டேபிள், தரை என வீட்டின் ஒவ்வொரு மூலையையும் கிளீன் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தினால் ரொம்ப நல்லது. துணியை லேசாக நனைத்துத் துடைத்தால் வீடு பளிச்சென்று ஆகிவிடும்.

34
தேவையில்லாத பொருட்களைச் சேர்க்காதீர்கள்
Image Credit : Asianet News

தேவையில்லாத பொருட்களைச் சேர்க்காதீர்கள்

வீட்டுக்குள் இருக்கிற பூச்சிகளைத் தேடி சிலந்திகள் வரும். தினமும் வலை கட்டி அவை இரை தேடும். அதனால், பூச்சிகள் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தேவையில்லாத பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். ஒவ்வொரு அறையிலும் பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வருகிற மாதிரி, போதுமான இடவசதி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சரிபாதி வினிகர், சரிபாதி தண்ணீர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை வீட்டின் மூலை முடுக்குகளில் ஸ்பிரே செய்யுங்கள். வினிகர் வாசனைக்குச் சிலந்தி வலைகள் சேராது. அதேபோல, பெப்பர்மின்ட் எசென்ஷியல் ஆயிலை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்தாலும் ஒட்டடை சேர்வது குறையும். கிராம்பு எண்ணெய், சிட்ரஸ் பழத்தோல்களின் வாசனைக்கும் சிலந்திகள் தெறித்து ஓடிவிடும்.

44
மூலிகைத் தாவரங்கள் கைகொடுக்கும்
Image Credit : Asianet News

மூலிகைத் தாவரங்கள் கைகொடுக்கும்

ரோஸ்மேரி, லாவெண்டர் மற்றும் புதினா போன்ற மூலிகைத் தாவரங்களை வீட்டின் ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம். இவற்றின் வாசனையானது சிலந்திகள், ஈக்கள் மற்றும் சின்னச் பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுத்து இயற்கையான அரணாகச் செயல்படும்.

வெளிப்பூச்சிகள் மற்றும் தூசிகள் நேரடியாக உள்ளே வராமல் இருக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களில் மெல்லிய வலைகளை பொருத்துவது இந்தத் தொல்லையை கணிசமாக குறைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
SCIENCE: முதலில் வந்தது கோழிதான்.! கொக்கரக்கோ விடுகதைக்கு விடை கிடைச்சாச்சு.!
Recommended image2
புது டிரெஸ் துவைக்காம அப்படியே போடுறீங்களா? இந்த 5 ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க!
Recommended image3
LPG Gas Tube: உங்க வீட்டு கேஸ் டியூப் வாங்கி எத்தனை வருஷமாச்சி? இப்பவே செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
புது டிரெஸ் துவைக்காம அப்படியே போடுறீங்களா? இந்த 5 ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved