அடிப்பிடித்த பாத்திரத்தை கை வலிக்காமல் ஈசியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!!
Clean Burnt Vessel : அடிப்பிடித்த பாத்திரத்தை மிகவும் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

அடிப்பிடித்த பாத்திரத்தை கை வலிக்காமல் ஈசியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!!
பொதுவாக சமைக்கும் போது பாத்திரம் அடிப்பிடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அப்படி அடிபிடிக்கும்போது சமைத்த உணவு வீணாவது மட்டுமின்றி, பாத்திரம் பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கும். முக்கியமாக அடிபிடித்த பாத்திரத்தை கழுவுவது சற்று சிரமமாக இருக்கும். அதுமட்டுமின்றி, அடிபிடித்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் சமைத்தால் சமைக்கும் உணவில் அடிபிடித்த நாற்றம் வீசும். எனவே அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக கழுவுவதற்கு சில பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால் மட்டும் போதும். அவை பாத்திரத்தில் இருக்கும் விடாப்படியான கறையை எளிதில் நீக்கிவிடும். மேலும் பாத்திரம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இப்போது அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்வதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய டிப்ஸ்
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா அடிபிடித்த பாத்திரத்தில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இதற்கு தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து, அதை அடிபிடித்து பாத்திரத்தில் ஊற்றி சுமார் 20 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு பாத்திரம் கழுவும் ஸ்க்ரப் கொண்டு தேய்த்து கழுவினால் போதும் எவ்வளவு பெரிய விடாப்பிடியான கறையையும் சுலபமாக நீங்கிவிடும்.
வினிகர்:
வினிகரை கொண்டு அடிப்பிடித்த பாத்திரத்தில் இருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக நீக்கிவிடலாம். ஏனெனில் வினிகரில் அசிடிட்டி ஆசிட் உள்ளது. இது பாத்திரத்தில் படிந்த கரையை விரைவில் நீக்கும். அதுவும் குறிப்பாக, அலுமினிய பாத்திரத்தில் படிந்த கறையானது சீக்கிரமாகவே நீங்கிவிடும்.
எலுமிச்சை:
அடிபிடித்த பாத்திரத்தை கழுவுவதற்கு மற்றொரு சிறப்பான பொருள் எலுமிச்சை. இதில் இருக்கும் அசிடிட்டி அமிலம் பாத்திரத்தில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக நீக்கிவிடும். இதற்கு எலுமிச்சை சாறு அடிபிடித்த பாத்திரத்தில் ஊற்றி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு பாத்திரம் கழுவும் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் போதும். கறை எளிதில் நீங்கிவிடும்.
உப்பு:
உப்பு சமையலுக்கு மட்டுமின்றி கறைகளை சுத்தப்படுத்த உதவும் பொருட்களில் ஒன்றாகும். இதற்கு அடிப்பிடித்த பாத்திரத்தில் உப்பை தூவி, நன்கு தேய்த்து கழுவினால் போதும். பாத்திரத்தில் உள்ள கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
தக்காளி சாஸ்:
என்ன தக்காளி சாஸா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், தக்காளி சாஸை கொண்டு அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். ஏனெனில் தக்காளியில் இருக்கும் ஆசிட்டானது பாத்திரத்தில் உள்ள கறைகளை விரைவாக நீக்கிவிடும். அதிலும் குறிப்பாக ஸ்டீல் பாத்திரத்தில் இருக்கும் கறையை சீக்கிரமாகவே போக்கிவிடும்.
இதையும் படிங்க: வதங்கிய காய்கறியை 'ப்ரெஷ்' ஆக மாற்றுவது முதல் பயனுள்ள '10' கிச்சன் டிப்ஸ்
சூடான நீர்:
அடிப்பிடித்த பாத்திரத்தில் கடும் சூட்டில் இருக்கும் தண்ணீரை ஊற்றி சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு பாத்திரம் கழுவும் பிரஷ் கொண்டு தேய்த்தால் போதும் கறைகள் உடனே நீங்கிவிடும்.
தயிர்:
அடிப்பிடித்த பாத்திரத்தில் இருக்கும் கறையை போக்க தயிர் பயன்படுத்தலாம். ஆனால் தயிரானது மெதுவாக தான் கறையை நீக்கும். முக்கியமாக பால் அடிப்பிடித்திருக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்ய தயிர் பயன்படுத்தினால், அது கறையை நீக்கிவிடும்.
இதையும் படிங்க: எண்ணெய் பிசுபிசுப்பான கிச்சன் டைல்ஸ்.. ஒரு நிமிடத்தில் பளபளனு மாற டிப்ஸ்