MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • AC Cleaning : கழட்டவே வேண்டாம்... வெறும் ரிமோட் வச்சே ஏசி-யை சூப்பரா க்ளீன் பண்ணலாம் தெரியுமா?

AC Cleaning : கழட்டவே வேண்டாம்... வெறும் ரிமோட் வச்சே ஏசி-யை சூப்பரா க்ளீன் பண்ணலாம் தெரியுமா?

AC Cleaning With Remote : ஏசி-யை சரியா சுத்தம் செஞ்சா கூலிங் நல்லா இருக்கும், கரண்ட் பில்லும் குறையும். ரிமோட் மூலமாவே AC-க்கு உள்ள இருக்கிற அழுக்கு, ஈரப்பதத்தை ஈஸியா நீக்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 12 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AC Cleaning Tips
Image Credit : Asianet News

AC Cleaning Tips

ஏசியை நாம எவ்வளவு அதிகமா பயன்படுத்துறோமோ, அந்த அளவுக்கு அதுக்குள்ள தூசியும் அழுக்கும் சீக்கிரமா சேர்ந்துடும். அழுக்கா இருக்கிற ஏசி, கூலிங்கை குறைக்கிறது மட்டுமில்லாம, கரண்ட் பில்லையும் எகிற வைக்கும். ஒவ்வொரு தடவையும் ஏசியை கழட்டி மாட்டி சுத்தம் செய்றது எல்லாருக்கும் சுலபமான காரியம் இல்லை. இந்த மாதிரி நேரத்துல, ரிமோட் மூலமாவே ஏசியை சுத்தம் செய்ற டெக்னிக் ரொம்பவே கை கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிமோட் மூலம் எப்படி சுத்தம் செய்வது?
Image Credit : Getty

ரிமோட் மூலம் எப்படி சுத்தம் செய்வது?

இப்போ வர்ற பெரும்பாலான ஏசிக்களில் ' செல்ஃப் கிளீன்' (Self Clean) அல்லது ' ஆட்டோ கிளீன்'னு (Auto Clean) ஒரு ஆப்ஷன் கொடுத்திருக்காங்க. இந்த வசதி, ஏசிக்கு உள்ள சேர்ந்திருக்கிற தூசி, பாக்டீரியா, ஈரப்பதம் எல்லாத்தையும் நீக்க உதவுது. இதை ஆன் பண்ணா, ஏசி தானாகவே உள்ள சுத்தம் செஞ்சுட்டு, சிஸ்டத்தையும் ஈரப்பதம் இல்லாம காய வச்சிடும்.

முதல்ல ஏசியை ஆன் பண்ணுங்க. அதுக்கப்புறம், ரிமோட்ல இருக்குற ' செல்ஃப் கிளீன்' அல்லது ' ஆட்டோ கிளீன்' பட்டனை 2-ல இருந்து 5 செகண்ட் வரைக்கும் அழுத்திப் பிடிங்க. இதுக்கு அப்புறம், ஏசி கொஞ்ச நேரம் தானாவே வேலை செய்யும், அந்த வேலை முடிஞ்சதும் தானாவே ஆஃப் ஆகிடும்.

34
இந்த வசதி எப்படி வேலை செய்யுது?
Image Credit : Getty

இந்த வசதி எப்படி வேலை செய்யுது?

' செல்ஃப் கிளீன்' மோடுல, ஏசி முதல்ல கூலிங் மோடுல ஓடும். அப்போ உள்ள இருக்குற அழுக்கு எல்லாம் இளகிடும். அதுக்கப்புறம், ஃபேன் மோடுக்கு மாறி, உள்ள இருக்குற ஈரப்பதத்தை காய வச்சிடும். இதனால, பூஞ்சை, பாக்டீரியா உருவாகுற வாய்ப்பு ரொம்பவே குறைஞ்சிடும்.

நல்ல ரிசல்ட் வேணும்னா, வாரத்துக்கு 1–2 தடவை இந்த வசதியை பயன்படுத்தலாம். குறைஞ்சது 10-ல இருந்து 15 நாளைக்கு ஒரு தடவையாவது கண்டிப்பா யூஸ் பண்ணுங்க. ஆனா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க, இது உள்ள இருக்கிற மெஷினை மட்டும்தான் சுத்தம் பண்ணும். ஃபில்டரை நாமதான் அப்பப்போ கையால சுத்தம் செய்யணும்.

44
சுத்தம் செய்யும் போது இந்த விஷயங்களை கவனிங்க
Image Credit : Pixabay

சுத்தம் செய்யும் போது இந்த விஷயங்களை கவனிங்க

  • ' செல்ஃப் கிளீன்' வசதி ஏசிக்கு உள்ள இருக்கிற ஈரப்பதம், அழுக்கை நீக்கும்.
  • இது பூஞ்சை, பாக்டீரியா வராம தடுக்கும்.
  • ரிமோட்ல 2–5 செகண்ட் பட்டனை அழுத்தினா போதும், இது ஆக்டிவேட் ஆகிடும்.
  • இந்த பிராசஸ் நடக்கும்போது ஏசி தானாவே ஆன்-ஆஃப் ஆகும்.
  • வாரத்துக்கு 1–2 முறை பயன்படுத்துறது நல்லது.
  • ஃபில்டரை 15–20 நாளைக்கு ஒருமுறை கையால சுத்தம் செய்யணும்.
  • நல்ல கூலிங்கிற்கு, அப்பப்போ டீப் கிளீனிங் செய்றதும் அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏசி சுத்தம் செய்தல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Related Stories
Recommended image1
AC ஆஃப் பண்ணதும் ரூம் மறுபடியும் ஹாட்டா மாறுதா? மணிக்கணக்கில் கூலிங்கை தக்கவைக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
AC Water : ஏசி தண்ணியை வேஸ்ட் பண்ணாதீங்க... அதைவச்சு என்னென்ன பண்ணலாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved