AC Water : ஏசி தண்ணியை வேஸ்ட் பண்ணாதீங்க... அதைவச்சு என்னென்ன பண்ணலாம் தெரியுமா?
AC Water Reuse : கோடை காலத்தில் ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக்காமல், பல வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். தண்ணீர் சேமிக்க உதவும் 5 எளிய மற்றும் ஸ்மார்ட்டான வழிகளை இங்கே பார்க்கலாம்.

AC Water Reuse
கோடை காலத்தில் நீங்களும் ஏசி பயன்படுத்துவீங்கதானே? அப்படி பயன்படுத்தும்போது, ஏசியின் அவுட்லெட் பைப்பில் இருந்து தொடர்ந்து தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும். அந்தத் தண்ணீரை நீங்க சும்மா வெளியே கொட்டிவிடுகிறீங்களா? அப்படினா, இனி அப்படி செய்யாதீங்க. ஏசியில் இருந்து வெளியேறும் இந்த கண்டன்ஸ்டு வாட்டரை பல வழிகளில் நாம பயன்படுத்தலாம். இந்தத் தண்ணீர் குடிக்க ஏற்றது இல்லை என்றாலும், பல வேலைகளுக்குப் பயன்படுத்தி தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். அந்த தண்ணீரை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஏசி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?
ஏர் கண்டிஷனரில் இருந்து வெளியேறும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவது ஒரு சிறந்த வழி. இந்தத் தண்ணீரில் மினரல்ஸ் குறைவாக இருப்பதால், செடிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. சொல்லப்போனால், இது செடிகளின் வளர்ச்சிக்குக் கூட உதவும். தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் சமயத்தில் இந்த ஏசி தண்ணீரை நீங்கள் பயன்படுத்தினால் செடிகளும் வாடாமல் ஃபிரெஸ் ஆக இருக்கும்.
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
பால்கனியை கழுவவோ அல்லது வீடு துடைக்கவோ ஏசி தண்ணீரை நீங்க பயன்படுத்தலாம். ஒரு சுத்தமான வாளியில் இந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வையுங்கள். வாளி நிரம்பியதும், அதை வைத்து தரை துடைக்கலாம். இப்படி செய்யும்போது தரையில் கரைகள் படிவதும் குறையும். வீட்டையும் உங்களால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
டாய்லெட் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
ஏசி தண்ணீரை ஒரு வாளியில் சேமித்து வைத்து, டாய்லெட் ஃப்ளஷ் செய்ய பயன்படுத்தலாம். இல்லை என்றால், பாத்ரூம் கழுவுவதற்கும் இந்தத் தண்ணீரை யூஸ் பண்ணலாம். இதன் மூலம் நல்ல தண்ணீரை சேமிக்க முடியும், தேவையில்லாத தண்ணீர் விரயமும் இருக்காது.
வண்டி கழுவ பயன்படுத்தலாம்
ஏசி தண்ணீரை உங்கள் வண்டிகளைக் கழுவவும் பயன்படுத்தலாம். இந்தத் தண்ணீரில் மினரல்ஸ் குறைவாக இருப்பதால், உங்கள் கார் அல்லது பைக்கை இதனால் கழுவும்போது, தண்ணீர் காய்ந்த பிறகு அதன் தடம் படியும் வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த தண்ணீரை வைத்து கழுவினால் உங்கள் காரோ, பைக்கோ பளபளக்கும்.
சாதாரண துணிகளைத் துவைக்கலாம்
அதிக அழுக்கு இல்லாத துணிகளைத் துவைப்பதற்கும் ஏசி தண்ணீரை நீங்க பயன்படுத்தலாம். தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் மட்டும் இந்த தண்ணீரை பயன்படுத்துங்கள். இது துணிகளை நன்றாக சுத்தம் செய்யும். ஆனால், கறை படிந்த அல்லது அதிக அழுக்குள்ள துணிகளை இதில் துவைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கவனத்தில் கொள்க - இந்த ஏசி தண்ணீரை ஒருபோதும் சமையலுக்கோ அல்லது குடிப்பதற்கோ பயன்படுத்த வேண்டாம். சேமித்து வைக்கும்போது, பாத்திரத்தை மூடி வைக்கவும். தண்ணீர் சேமிக்கும் வாளி அல்லது தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்யவும். இல்லையெனில் அதில் கிருமிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

