- Home
- Lifestyle
- ambedkar quotes: "ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக என்னை அர்பணித்து கொண்டேன்" - அம்பேத்கர் பொன்மொழிகள்!
ambedkar quotes: "ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக என்னை அர்பணித்து கொண்டேன்" - அம்பேத்கர் பொன்மொழிகள்!
Dr BR Ambedkar Birthday 2023: ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினமாகும். இங்கு அவருடைய பொன்மொழிகளில் சில தொகுக்கப்பட்டுள்ளன..

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைசிறந்த மனிதர் மட்டுமில்லாமல், சமூக சீர்திருத்தவாதியும் கூட. பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், அரசியல்வாதியும் ஆவார். இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படும் இவர், இந்தியாவின் நவீன அடையாளத்தை சமத்துவத்துடன் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சர் இவர் தான்.1891ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவில் பிறந்தார். இந்தியாவின் பல மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய சமூகப் பணிகள் அவ்வளவு அளப்பரியது.
அம்பேத்கர் என்ன செய்தார்?
இந்திய சமூகத்தில் இருந்து தீண்டாமை என்ற சமூகத் தீமையை வேரோடு அழிக்க அம்பேத்கர் அரும்பணியாற்றினார். இந்து மதத்திற்குள் சாதியினால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அடைய முடியாது என்ற கசப்பான உண்மையை அறிந்த அம்பேத்கர், இந்தியாவில் தலித்துகள் மேம்பாடு மற்றும் அதிகாரம் பெறுவதற்கான இயக்கத்தை உருவாக்கி அதை வழிநடத்தினார். மனுதர்மத்தின்படி ஏற்ற தாழ்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ள இந்து மதத்தை புறக்கணித்து, அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, நாக்பூரில் 5 லட்சம் ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்திற்கு மாறினார். டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை பொருளாதார மற்றும் சாதி பாகுபாடுகளின் அனுபவங்கள் ஆழமாகப் பாதித்தன. அவர் பௌத்த மதத்திற்கு மாறும் முன்பு வரை இந்த அனுபவங்களில் பலவற்றை அவர் தனது சுயசரிதை புத்தகமான 'விசாவுக்காக காத்திருக்கிறேன்' (Waiting For A Visa) என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அம்பேத்கர் ஆகஸ்ட் 29, 1947 இல் இந்திய அரசியலமைப்பிற்கான அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதி, சமத்துவம், ஜனநாயகத்தின் மதிப்புகளை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவரது தலைமையும் பார்வையும் கருவியாக இருந்தது. அவரது எழுச்சியூட்டும் மேற்கோள்களில் சிலவற்றைப் பார்ப்போம்:
அம்பேத்கர் பொன்மொழிகள் (Ambedkar ponmozhigal tamil)
1). "பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு, ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடலாம்" - அம்பேத்கர்
2). "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தையே விரும்புகிறேன்"- அம்பேத்கர்
இதையும் படிங்க: நம் மனதை எப்படி புரிந்து கொள்வது? புத்தர் கூறிய 5 நிலைகள்!!
அம்பேத்கர் பொன்மொழிகள் (Ambedkar ponmozhigal tamil)
3). " சமூகத்தால் நிகழ்த்தப்படும் சர்வாதிகாரம், அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை காட்டிலும் கொடியது" - அம்பேத்கர்
4). "எனது சொந்த நலன்களை மட்டும் எண்ணியிருந்தால் நான் விரும்பியதை அடைந்திருப்பேன். காங்கிரஸில் நான் இணைந்திருந்தால் அந்த அமைப்பின் உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் சொன்னது போல ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக என்னை அர்பணித்து கொண்டேன்" - அம்பேத்கர்
5). "கற்பி, ஒன்று சேர். புரட்சி செய்" -- அம்பேத்கர்
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!