MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பளு தூக்குதல் நல்லதா? இதை பண்ணா 'மாரடைப்பு' வருமா?  

பளு தூக்குதல் நல்லதா? இதை பண்ணா 'மாரடைப்பு' வருமா?  

Weight Lifting And Heart Attack : பளு தூக்குதல் செய்வதால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவது உண்மையா? என்பது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 06 2025, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Weight Lifting And Heart Attack Risk In Tamil

Weight Lifting And Heart Attack Risk In Tamil

உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அன்றாட வாழ்க்கையில் நடைபயிற்சி, நடனம், ஓடுதல், பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்வது உடலில் இயக்கத்தை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தவும், மன நலனை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொதுவாக உடற்பயிற்சிகள் உடலை மெருகேற்ற உதவுமே தவிர, உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது. ஆனால்  பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை தரும் நோயால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு இதய நிபுணரிடம் அது குறித்து கேட்கப்பட்டது. அந்த விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Risks of weight lifting in tamil

Risks of weight lifting in tamil

பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்படும் பயம் பொதுவாக பலருக்கும் இருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியது தான்.  ஏனென்றால் அதிக எடையை தூக்கும்போது உடலமைப்பில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதய அமைப்பிலும் அதிக அழுத்தம் உணரப்படுகிறது. உண்மையில் 'பளு தூக்குதல்' பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுடைய இதயம் ஆரோக்கியமாக மாறுகிறது. நீங்கள் சரியான எடையுடன், முறையாக பளு தூக்குதல் பயிற்சியை செய்யும்போது உங்களுக்கு நீங்கள் நினைத்து பார்க்காத நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதிக எடையை தூக்குவது சில நேரங்களில் பாதிப்பை தரலாம்.  

இதையும் படிங்க:  காபி குடித்தால் மாரடைப்பு வராதா? ஆய்வு சொல்லும் உண்மை!! எப்படி காபி குடிக்கலாம்?

35
Benefits of weight lifting in tamil

Benefits of weight lifting in tamil

பளு தூக்குதல் நன்மைகள்: 

வெயிட் லிப்டிங் (weight lifting) என சொல்ல கூடிய பளு தூக்குதல் பயிற்சி செய்வதால் உங்களுடைய தசையின் வலிமை அதிகரிக்கிறது.  தசைகளின் சகிப்புத்தன்மை மேம்படுகிறது. உங்களுடைய உடல் உறுதியாகி தோரணையில் (posture) மாற்றம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்யும்போது அவர்களுடைய மனநிலை முன்னேற்றம் காண்கிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் கார்டியோ பயிற்சிகளை மட்டும் செய்யாமல் எடைகளுடன் பயிற்சி செய்யும்போது உடலமைப்பில் நல்ல மாற்றம் தெரியும். விரைவில் தோற்றத்தில் மாற்றத்தை காண்பீர்கள்..

இதையும் படிங்க:  இரவில் தொடர்ந்து 'மது' குடித்தால் மாரடைப்பு வருமா?  

 

45
weight lifting cause heart attack in tamil

weight lifting cause heart attack in tamil

மாரடைப்பு ஏன் வருகிறது? 

மாரடைப்பு முன்னறிவிப்பின்றி வரக்கூடிய நோயாகும். இதை முன்கூட்டியே தடுக்க மக்கள் விரும்புகின்றனர். ஆனால் முற்றிலுமாக மாரடைப்பை தவிர்க்க எந்த வழியும் இல்லை. அது வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். அதற்கு உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறையை சற்று மாற்றிக் கொள்ளலாம். அதிக எடையை நீங்கள் தூக்கி பயிற்சி செய்யும் போது இதய அமைப்பில் சற்று கடினமான உணர்வுகள் ஏற்படும். ஆனால் கவனமாக சரியான எடையுடன் பயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்திற்கு நன்மையைத்தான் செய்ய வாய்ப்புள்ளது. 

பளு தூக்குதல் பயிற்சி செய்யும் போது உங்களுடைய இதய துடிப்பு அதிகமாகிறது.  அப்போது உடலில் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இப்படியாக இதய ஆரோக்கியத்திற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. இதனால் பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால் போதிய ஓய்வெடுக்காமல் பயிற்சி செய்வது, ஏற்கனவே ஏதேனும் மருத்துவ சிக்கல்  இருக்கும் நபர்கள் தீவிரமாக பளு தூக்குதல் பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

55
Safe weight lifting practices in tamil

Safe weight lifting practices in tamil

எப்போது ஆபத்து? 
 
பளு தூக்குதல் பயிற்சியை செய்யும்போது உங்களுடைய இதய அமைப்பில் அதிக அழுத்தம் உணரப்படுவதை கவனிக்க வேண்டும். ஒரே நாளில் அதிக எடையை தூக்க கூடாது. புதிதாக இந்த பயிற்சியை செய்பவர்கள் படிப்படியாக எடையை அதிகரிக்க வேண்டும்.  தங்களுடைய திறனை மிஞ்சிய அளவிற்கு ஜிம் சென்றதும் எடைகளை தூக்கக்கூடாது. திடீரென உடலுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் உங்களை தள்ளலாம். நீங்கள் பயிற்சி செய்யும்போது சரியான தோரணையில் நின்று செய்ய வேண்டும். தவறான முறையில் செய்தால் இதயத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். கைகள், முதுகு பகுதிகளில் வலி ஏற்படலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கைத்தறி vs விசைத்தறி புடவைகள்: 2-யும் வேறுபடுத்தி அறிய நிபுணர்கள் கூறும் சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
Malavika Mohanan : 2026-ம் ஆண்டில் மாளவிகா மோகனனின் 7 அசத்தல் ஃபேஷன் ஆடைகள்!
Recommended image3
Wedding : உலகின் டாப் 10 காஸ்ட்லி திருமணங்கள்! 13,000 கோடி ரூபாயில் நடந்த திருமணம் யாருடையது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved