- Home
- Lifestyle
- டீக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கா? இந்த 1 இலையில் 'டீ' போட்டு குடித்தால் உண்மையில் அவ்வளவு பயன்கள்
டீக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கா? இந்த 1 இலையில் 'டீ' போட்டு குடித்தால் உண்மையில் அவ்வளவு பயன்கள்
கொய்யா இலை டீயால் கண் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Guava Leaf Tea
இப்போதெல்லாம், போன், லேப்டாப் அல்லது டிவி பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதனால் பலருக்கும் கண் எரிச்சல், சோர்வு, வறட்சி, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இளம் வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை வருகிறது. இதுபோன்ற சமயங்களில், இயற்கையான முறையில் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க பலரும் விரும்புகின்றனர். அதில் ஒன்றுதான் கொய்யா இலை டீ.
கண் ஆரோக்கியத்திற்கு கொய்யா இலை டீ நன்மைகள் :
கொய்யா இலைகளில் வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் போன்ற கண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கண் அழுத்தத்தைக் குறைத்து, வறட்சியை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. அதிக நேரம் ஸ்கிரீன் பார்ப்பவர்களுக்கு இது கண்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களை ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாத்து, வயது தொடர்பான கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
கொய்யா இலை டீ போடுவது எப்படி?
5-7 புதிய கொய்யா இலைகளை ஒன்றரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு வடிக்கட்டி அதில் சிறிதளவு,தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது கஷாயம் போல இருந்தாலும் சுவையாக இருக்கும். இந்த டீயை காலையிலோ அல்லது மாலையிலோ குடித்தால் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். இது பார்வையை உடனடியாக மேம்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை.
குறிப்பு
கண் அழுத்தம், ஸ்கிரீன் டைம் சோர்வு, கண் வறட்சி குறைதல், கண்களில் ரத்த ஓட்டம் மேம்படுதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணிகள், கண் சிகிச்சை பெறுபவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே இதைக் குடிக்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

