1 கிலோ 30 ஆயிரம்! உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உப்பு எது தெரியுமா?
இந்த உலகிலேயே தனித்துவமான முறையில் செய்யப்பட்டு, 1 கிலோ உப்பு ரூ.30000 விற்கப்படுகிறது. அந்த உப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.

உப்புக்கு முக்கியத்துவம்:
சமையலில் உப்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்கிற பழமொழிக்கு ஏற்ப, நாம் செய்த தினமும் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் உப்பு இருந்தால் தான், அந்த சாப்பாடு சுவையாக இருக்கும். எனவே தான் ஆதிகாலத்தில் இருந்து இப்போது வரை உப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க படுகிறது.
அயோடின் கலந்த உப்பு:
உப்பு கடல் நீர் ஆவி ஆகுதல் மூலம் நமக்கு கிடைக்கிறது. சமீப காலமாக இந்த உப்பை செயற்கையான முறையில் ஆவியாக செய்து தயாரித்து வருகின்றனர். அதே போல்... 30 - 40 வருடங்களுக்கு முன், உப்பை மூட்டைகளில் ஏற்றிக்கொண்டு, விற்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இப்படி விற்பனை செய்யப்படும் உப்பில் அயோடின் சத்து இல்லை என்பதற்காக, அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்கப்படவேண்டும் என்பதால் தற்போது பாக்கெட்களில் மட்டுமே உப்புகள் அடைத்து விற்கப்பட்டு வருகிறது.
முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளோ விஷயம் இருக்கா? இது தெரிஞ்சா இனிமேல் கீழே ஊத்தமாடீங்க!
இந்து உப்பு:
இப்படி கடைகளில் வெள்ளை நிறத்தில் விற்கப்படும் உப்புகள் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் மட்டுமே விற்கப்படுகிறது. இதை தவிர்த்து மலையை குடைந்து எடுக்கப்படும் இந்து உப்பு (ரெட் சால்ட்) சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. அந்த உப்பின் விலை 120 முதல் 150க்குள் இருக்கும்.
ஆனால் இந்த இரண்டு உப்பிற்கும் பெரிதாக சுவையில் எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை. வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்பை விட, சிவப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த உப்பு உவர்பு கொஞ்சம் குறைவாகவே இருப்பது போல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு கிலோ உப்பு 30 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மூங்கில் உப்பு:
ஆம் உலகிலேயே கொரியா நாட்டில் செய்யப்படும் மூங்கில் உப்பு தான் மிகவும் விலை உயர்ந்தது என சொல்கின்றனர. இதன் ஒரு கிலோ மட்டும், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை கொரியன் சால்ட் என்றும் கொரியன் பேம்பூ சால்ட் என்றும் அழைக்கின்றனர். இந்த உப்பு கொரியன் உணவுகளை சமைப்பதற்கு மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவ முறைக்கும் இந்த உப்பு பயன்படுத்த படுகிறது. இந்த உப்பை பயன்படுத்துவதன் மூலம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
லூஸ் மோஷனால கஷ்டபடுறீங்களா? '1' ஸ்பூன் தேனில் தீர்வு இருக்கு!!
தயாரிப்பு முறை:
இந்த உப்பின் விலைக்கு, முக்கிய காரணம் அதன் தயாரிப்பு முறை தான் என கூறுகின்றனர். மூங்கில் தண்டுகளில் கடலில் இயற்கையாக ஆவியாகுதல் மூலம் கிடைக்கும் உப்பை அடைத்து, அதன் மேல் அதிக அளவில் மஞ்சள் களிமண்ணை கொண்டு மூடுகிறார்கள். பின்னர் பைன் விறகுகளை பயன்படுத்தி சுமார் 9 முறை அதனை சூட்டில் பதப்படுத்துகிறார்கள்.
1000 டிகிரி செலிசியஸ் டிகிரியில் சூடு படுத்த படுகிறது:
மிகவும் கனமாக களிமண் பூசப்பட்டுள்ளதால் உள்ளே இருக்கும் மூங்கில் உள்ளே இருக்கும் உப்பு மூங்கிலின் தன்மையை எழுத்து கொண்டு வேறு ஒரு நிலையை அடைகிறது. 9-ஆவது முறையாக சுமார் 1000 டிகிரி செலிசியஸ் சூட்டில் அந்த களிமண்ணை சூடு படுத்தி, பின்னர் உப்பை வெளியே எடுப்பார்கள். அந்த உப்பு நிறம் மாற்றம் அடைந்து மஞ்சள், சிவப்பு, நீளம், ஊதா, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த உப்பில் உவர்ப்பு மற்றும் இன்றி தனித்துவமான இனிப்பும் கலந்திருக்கும் என கூறுகின்றனர்.
இந்த உப்பு செய்வதற்க்கே சுமார் 50 நாட்கள் ஆகும் எனக் கூறுகின்றனர். இந்த உப்பின் விலை அதிகமாக இருந்தாலும், இதனை வாங்குவதற்கு பலர் போட்டி போடுகின்றனர். தயாரிப்பு பணிகளுக்கு முன்பே இதை ஆர்டர் செய்து பலர் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு முகத்தில் இந்த '1' பொருளை தடவி பாருங்க.. முகம் தகதகனு மாறிடும்!