MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளோ விஷயம் இருக்கா? இது தெரிஞ்சா இனிமேல் கீழே ஊத்தமாடீங்க!

முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளோ விஷயம் இருக்கா? இது தெரிஞ்சா இனிமேல் கீழே ஊத்தமாடீங்க!

முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல், மீண்டும் சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 29 2025, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் முட்டை:

ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் முட்டை:

முட்டை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதால், அசைவம் உண்ணாத சிலர் கூட ஆரோக்கிய நன்மைக்காக முட்டையை எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல் பாடி பில்டிங் செய்பவர்கள், ஜிம்மில் அதிக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் முட்டையை ஏதேனும் ஒரு விதத்தில் உட்கொள்வது அவர்களின் உடலுக்கு நல்லது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அவித்த முட்டையே உடலுக்கு நல்லது:

அவித்த முட்டையே உடலுக்கு நல்லது:

ஆம்லெட்டாக  முட்டையை எடுத்துக் கொள்வதை விட அவித்த முட்டை சாப்பிடுவதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டையில் எந்த அளவுக்கு சத்து நிறைந்துள்ளதோ...  அதே அளவில் முட்டையின் தண்ணீரிலும் சில சத்துக்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?  ஆம் முட்டையை நாம் அவிக்கும் போது, முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் அதன் நீரிலும் வெளியேறுகிறது.

தண்ணீர் குடிக்கும் முறை தெரியுமா? 'இப்படி' குடித்தால் கண்டிப்பா பிரச்சனை தான்!!
 

35
முட்டை அவித்த நீர் செடிகளுக்கு சிறந்தது:

முட்டை அவித்த நீர் செடிகளுக்கு சிறந்தது:

 இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, போன்றவை தாதுக்கள் உள்ளன. இந்த முட்டை அவித்த தண்ணீரும் இது நாள் நாம் கீழே தான் ஊற்றி இருப்போம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். அந்த தண்ணீரை சில விஷயங்களுக்கு நாம் பயன்படுத்த முடியும். முட்டை அவித்த தண்ணீரை ஆறவைத்து  உங்கள் வீட்டில் செடிகளுக்கு ஊற்றலாம். இது செடியின் வளரும் மண்ணின் தரத்தை மேம்படுத்தி தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது. தொடர்ந்து முட்டையின் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வருவதால், உங்கள் வீட்டுச் செடிகள் ஆரோக்கியமாக வளர்வதோடு அதிக பூக்களை கொடுக்கும். 

45
தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் முட்டை அவித்த நீர்:

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் முட்டை அவித்த நீர்:

அதே போல் முடி வளர்ச்சிக்கும் முட்டையின் தண்ணீரை பயன்படுத்தலாம் என கூறுகின்றனர்.  இது கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் முட்டை வேக வைத்த நீரை தலை குளித்த பின்னர் தலையில் ஊற்றிக் கொள்வதன் மூலம், பொடுகு மற்றும் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சேதமடைந்த கூந்தலையும் இந்த முட்டையின் நீர் வலுப்பெறச் செய்கிறது.

கருப்பாக இருக்கும் டீ வடிகட்டியை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா?
 

55
சுத்தம் செய்ய பயன்படும் முட்டையின் நீர்:

சுத்தம் செய்ய பயன்படும் முட்டையின் நீர்:

முட்டை தண்ணீரில் சிறிய அளவில் காரத்தன்மை இருப்பதால், கிரீஸ் அழுக்கு, கிச்சனில் உள்ள அழுக்குகளை இது எளிதாக போக்கும் என கூறப்படுகிறது.  முட்டையை தண்ணீரை பயன்படுத்தும் போது, முட்டையை நன்கு கழுவிய பின்னர் தண்ணீரில் போடுங்கள். ஒரு சிலர் முட்டை அவிக்கும் போது தண்ணீரில் முட்டை உடையாமல் இருக்க, சிறிதளவு கல் உப்பு போடுவார்கள். ஆனால் செடிகளுக்கு ஊற்றும் போதும், உங்கள் தலைமுடிக்கு முட்டை அவித்த நீரை பயன்படுத்தும் போதும் அதில் தண்ணீரில் உப்பு சேர்க்காதீர்கள்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved