High Blood Pressure: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த 10 உணவுகளில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க!
உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்பட முக்கிய காரணம் என்றால்... ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே ஆகும். இவற்றை நாம் சரிசெய்து கொண்டாலே எளிதில் உயர் ரத்த அழுத்தத்தை நாம் வென்றிடலாம். அந்த வகையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிட கூடாத 10 வகை உணவுகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
உப்பு (Salt)
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் உப்பு முதலிடத்தில் உள்ளது. சோடியம் இரத்தத்தில் திரவத்தின் அளவை அதிகரிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உப்பை உணவில் சேர்க்க வேண்டாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு சேர்ப்பது ஆரோக்கியமானதல்ல.
பீட்சா: (Pizza)
பீட்சாவில் உப்பு அளவு அதிகமாக இருக்கிறது. ஒரு நடுத்தர அளவிலான பீட்சாவில் சுமார் 3,500 மில்லிகிராம் சோடியம் இருக்க கூடும். உப்பு இல்லாமல் வீட்டிலேயே பீட்சா செய்வது சாப்பிடுவது இதற்க்கு சிறந்த வழியாகும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato chips)
உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க, உங்கள் உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு சிப்சை கண்டிப்பாக சேர்த்து கொள்ளாதீர்கள். இதில் உள்ள அதிக சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அவை எடையை அதிகரிக்கச் செய்து இதயத்தின் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி (Processed meat)
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிகப்படியான சோடியம் உள்ளது, ஆனால் அவை பொதுவாக மிகவும் கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால், நோயை உருவாக்கும் அபாயம் 44 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே பதப்படுத்த பட்ட இறைச்சியை விட பிரெஷ் இறைச்சியை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.
சர்க்கரை (Sugar)
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோய் இல்லையென்றாலும், உணவில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, பிரெஷ் பழங்களில் சர்க்கரை இல்லாமல் பழச்சாறு போட்டு அருந்துவது மிகவும் நல்லது.
ஊறுகாய் (Pickles)
ஊறுகாயில் அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சாப்ஃட் ட்ரிங்க்ஸ் (Soft drinks)
வெளியில் ப்ரீஸர்வேட் செய்து விற்கப்படும் குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாகவே உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே இதனை அடிக்கடி குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். அதே போல் இந்த பானங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன மற்றும் உடலில் HDL (நல்ல) கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன என்று ஆராச்சிகள் கூறுகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சீஸ் (Cheese)
சீஸ் என்பது மிக அதிக சோடியம் கொண்ட உணவு. அமெரிக்க பாலாடைக்கட்டி மற்றும் நீல சீஸ் போன்ற சில பாலாடைக்கட்டிகள், அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 300 மில்லிகிராம் சோடியம் கொண்டிருக்கின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைத் தவிர்ப்பது நல்லது.
காஃபின் (Caffeine)
காஃபின் மிக அதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காஃபின் உட்கொள்வதை குறைப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கெட்ச்அப் (Ketchup)
கெட்ச்அப் உப்பு நிறைந்த உணவுகளில் ஒன்றாகும். ஒரு தேக்கரண்டி கெட்ச்அப்பில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. கெட்ச்அப்பில் அதிக அளவு உப்பு உள்ளதால் திக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.