அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா...? வீட்டிலேயே இருக்கு கை மருத்துவம்!
உடலில் உஷ்ணம், அதிகரித்து விட்டாலோ... அல்லது அழுக்கு சேர்வதாலோ சிறு சிறு, கட்டிகள் வந்து உங்களை கஷ்டப்படுத்தும். அக்குள் போன்ற இடங்களில் வந்தால் கைகளை அசைக்க கூட முடியாது, இது போன்ற நேரங்களில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு எப்படி குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க.
வெதுவெதுப்பான நீர் வைத்து, உங்களுக்கு கட்டி உள்ள இடங்களை சுத்த படுத்துங்கள், அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.
அல்லது கட்டி உள்ள உள்ளதை சுத்த படுத்திய பின், வலி உள்ள இடத்தில் மஞ்சள் குழைத்து பத்து போடுங்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு முறையாவது இப்படி செய்யுங்கள்.
அதே போல், கட்டி உள்ள இடத்தில்... நல்லெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக்கி மசாஜ் செய்வது வர கட்டி விரைவில் கரையும்.
முடிந்தவரை உணவில் பூண்டு நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சாலிசிலிக் ஆசிட் இருப்பது கூடுதல் பலம். அல்லிசின் இருப்பதால் நோய் அழற்சியை குறைக்கும்.
உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய, கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் கட்டிகள் வருவதை தடுக்க முடியும்.