- Home
- Lifestyle
- Guru peyarchi: தீபாவளிக்கு பிறகு குருவின் முழு அருளை பெறும் ராசிகள் இவைகள் தான்..! உங்கள் ராசி இதில் இருக்கா.?
Guru peyarchi: தீபாவளிக்கு பிறகு குருவின் முழு அருளை பெறும் ராசிகள் இவைகள் தான்..! உங்கள் ராசி இதில் இருக்கா.?
Guru peyarchi 2022 Palangal: ஜோதிடத்தின் படி,கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான குரு பகவான், தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இதனால் தீபாவளிக்கு பிறகு குருவின் முழு அருளை பெறும் ராசிகள் பற்றி நாம் பார்ப்போம்.

ஒருவருக்கு குருவின் பார்வை பட்டால் போதும், உங்களுக்கு இருந்த எல்லா தோஷமும் விலகி விடும். அந்த அளவிற்கு குரு பகவான் மகிமையானவர். கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான குரு தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். ஆம், அவர் தற்போது, வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அக்டோபர் 26 அன்று மீன ராசியில் இயல்பான இயக்கத்துக்கு மாறுவார். வருகிற நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் சஞ்சரிக்கும் குருவின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியினருக்குதீபாவளிக்கு பிறகு நிகழும் குருவின் இயக்கம் நல்ல பலன்களைக் கொடுக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உறவுகள் சுமூகமாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். புதிய நபர்களின் சந்திப்பு தொடர்பு அதிகரிக்கும், நினைத்தது நடக்கும்.
மிதுனம்:
மீனத்தில் குரு பகவானின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரும். நிதி நிலையை வலுவாக்கும். குறிப்பாக, மாணவர்களுக்கும் குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் அடையும் காலம் இது. தொழில் மேம்படும். நோயாளிகள் குணமாவார்கள்.
கடகம்:
கடகம் ராசியினருக்கு குருவின் பாதை மகிழ்ச்சி மழை பொழியும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபர திட்டம் இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் கனவு நிறைவேறும். திருமண தடை விலகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.