மகிழ்ச்சியான குழந்தைங்க பட்டியலில் நம்பர் '1' நாடு.. பெற்றோர் என்ன செய்றாங்க தெரியுமா?
Parenting Tips : குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது? அங்குள்ள பெற்றோர்கள் அப்படி என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி இங்கு காணலாம்.

மகிழ்ச்சியான குழந்தைங்க பட்டியலில் நம்பர் '1' நாடு.. பெற்றோர் என்ன செய்றாங்க தெரியுமா?
UNICEF படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் குழந்தைகளின் மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், கல்வி மற்றும் சமூக திறன்களின் வளர்ச்சியின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து ஒரு பட்டியலை வெளியிடும். அந்த வகையில், கடந்த ஆண்டு யுனிசெஃப் 41 உயர் வருமான நாடுகளின் தரத்தை ஆய்வு செய்ததில், 'நெதர்லாந்து' நாட்டில் இருக்கும் குழந்தைகள்தான் உலகளவில் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டறிந்துள்ளன. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் தான் அதன் பெற்றோருக்குரிய குறிப்புகளுக்கு பெயர் பெற்றது. உண்மையில், இங்கு இருக்கும் குழந்தைகள் உலகின் மகிழ்ச்சியான குழந்தைகளுக்கு பெயர் பெற்றுள்ளனர். எனவே இந்த நாட்டைப் பற்றியும் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை பற்றியும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நெதர்லாந்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க காரணம் என்ன?
உண்மையில், இந்த நாட்டில் இருக்கும் பெற்றோர்கள் பரஸ்பர ஒத்துழைப்பு, சமூக கற்றல் மற்றும் தனிப்பட்ட சாதனை ஆகியவற்றில் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் காரியங்களை செய்ய முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். குழந்தைகளை உடல் செயல்பாடு இசை, விளையாட்டு மற்றும் பிற விஷயங்களை செய்ய ஊக்குவிக்கிறார்கள். ஆதலால் தான் நெதர்லாந்தில் இருக்கும் குழந்தைகள் மனதளவில் நன்றாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், புத்திசாலியாகவும் வளர்கிறார்கள்.
நெதர்லாந்து பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை:
- இங்கு இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடும்போது கீழே விழுந்தால் உடனே ஓடிப் போய் பிடிக்க மாட்டார்கள் மற்றும் காயமடைந்தால் அதைப்பற்றி தொடர்ந்து கவலைப்பட மாட்டார்கள். கீழே விழுந்தாலும் அவர்களை தானாக எழுந்து மீண்டும் ஓடி விளையாடுவார்கள்.
- ஆய்வு ஒன்றில் நெதர்லாந்தில் கிட்டத்தட்ட பாதி தொழிலாளர்கள் பகுதிநேர வேலையில்தான் ஈடுபடுகின்றனர். முக்கியமாக தந்தைகள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு நாள் விடுமுறை எடுத்து தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்த அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோரின் இந்த '4' பழக்கங்கள் தான் காரணம்!
உலகில் மகிழ்ச்சியான குழந்தைகளைக் கொண்ட நாடு
- நெதர்லாந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குறைந்தபட்சம் ஒரு வேலையாது ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது உறுதி செய்கிறார்கள் குறிப்பாக இரவு நேரம் குடும்பமாக ஒன்று கூடி சாப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் நாளை பற்றி பேசி மகிழ்கிறார்கள். இப்படி பெற்றோருடன் இணைந்திருப்பது வளரும் குழந்தைக்கு மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி ரீதியாக இருக்கும்.
- நெதர்ல இருந்து பெற்றோர்கள் தங்களது முடிவுகளை ஒருபோதும் குழந்தைகள் மீது திணிக்க மாட்டார்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றியும், விவாதங்கள் நடத்துவதிலும், தங்கள் குழந்தைகளின் கருத்துக்களையும், யோசனைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதிலும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இது குழந்தையின் தன்னம்பிக்கையை பெரிதும் வளர்க்கும்.
இதையும் படிங்க: பள்ளி முடிந்து குழந்தைகள் சோர்வா வீட்டுக்கு வராங்களா? அவங்க சோர்வை நீக்க 5 டிப்ஸ்!!
உலகில் மகிழ்ச்சியான குழந்தைகளைக் கொண்ட நாடு
- நெதர்லாந்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதிலும், அவர்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவான பங்கை வகிக்கிறார்கள். ஆனால் அதற்கு என வரம்புகளையும் வைத்திருக்கிறார்கள்.
குறிப்பு : இந்த முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் நேசமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சுய கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், ஆர்வம் உள்ளவர்களாகவும், கூட்டுறவு கொண்டவர்களாகவும், புத்திசாலித்தனமாகவும் வளருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.