பள்ளி முடிந்து குழந்தைகள் சோர்வா வீட்டுக்கு வராங்களா? அவங்க சோர்வை நீக்க 5 டிப்ஸ்!!
Kids Tiredness After School : குழந்தைகள் பள்ளி முடிந்து சோர்வாக வருகிறார்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும் அவர்கள் சோர்வு நீங்கும்.

பள்ளி முடிந்து குழந்தைகள் சோர்வா வீட்டுக்கு வராங்களா? அவங்க சோர்வை நீக்க 5 டிப்ஸ்!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் சிரித்து விளையாட வேண்டும் என்றும் தான் விரும்புவார்கள். ஆனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சோர்வாக உணர்கிறார்கள். இதை பார்க்கும்போது பெற்றோருக்கு வருத்தமாக இருக்கும் ஆனால் இது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. குழந்தைகளின் சோர்வை போக்க சில குறிப்புகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும். அது என்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறிது நேரம் ஓய்வு எடுக்க வைக்கவும்
பள்ளியில் இருந்து வீடு திரும்பியது உங்கள் குழந்தையை சிறிது நேரம் ஓய்வெடுக்க வைக்கவும். அரை மணி நேரம் முதல் சுமார் ஒரு மணி நேரம் கழித்து உங்கள் குழந்தைக்கு பழச்சாறு அல்லது ஏதாவது பழங்களை சாப்பிட கொடுங்கள். வேண்டுமானால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு உலர் பழங்களையும் கொடுக்கலாம். அதன் பிறகு சுமார் ஒரு நேரம் மணி நேரம் கழித்து உங்கள் குழந்தையை வீட்டு பாடத்தை செய்யுமாறு சொல்லவும்.
படிக்கும் சூழல் அமைதியாக இருக்கவும்:
உங்கள் குழந்தை எங்கு படிக்கிறதோ அந்த சூழல் ரொம்பவே அமைதியாக இருக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல படிக்கும்போது மொபைல் போன், லேப்டாப் வீடியோ கேம் போன்றவற்றிலிருந்து உங்களுக்கு குழந்தையை விலக்கி வைக்க வேண்டும். உங்கள் குழந்தை படித்து முடித்தவுடன் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கவும்.
நிறைய தண்ணீர் கொடுக்கவும்:
தண்ணீர் குழந்தையின் மனதை புத்துணர்ச்சியடையை செய்வது மட்டுமில்லாமல், சோர்வையும் குறைக்கும். எனவே, நாள் முழுவதும் குழந்தைகள் நிறைய தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். தண்ணீர் அவர்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். குழந்தைகள் சோர்வாக உணர மாட்டார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளின் எடையை அதிகரிக்க பாதாம் எப்படி கொடுக்கலாம்?
குழந்தையுடன் உட்கார்ந்து பேசவும்:
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தை இடம் சிறிது நேரம் உட்காந்து பேசுங்கள். பள்ளியில் என்ன நடந்தது. என்ன கற்றுக் கொண்டாய்? போன்ற விஷயங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தை எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே பிணைப்பு பலப்படும். முக்கியமாக பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடனே குழந்தையின் கையில் மொபைல் போன் ஒரு போதும் கொடுக்க வேண்டாம். அது நல்ல பழக்கம் அல்ல.
நல்ல தூக்கம் அவசியம்:
ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதுபோல உங்கள் குழந்தை அதிகாலையை எழுப்பி சிறிய உடற்பயிற்சி செய்ய ஈடுபடுத்தவும். இது அவர்களது மன அழுத்தத்தை குறைக்கும் சோர்வை போக்கும்.
இதையும் படிங்க: குழந்தைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோரின் இந்த '4' பழக்கங்கள் தான் காரணம்!
நினைவில் கொள்:
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சொல்லும் விஷயங்களையும் கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனென்றால் பல சமயங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கருத்துக்களை புறக்கணிக்கிறார்கள். ஆனால் அது தவறு. பெற்றோர்கள் இப்படி நடந்து கொண்டால், அவர்கள் தங்களது குழந்தையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.