MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ரூ.451 கோடியில் வைர நெக்லஸ்.. ரூ.240 கோடி ஜெட்.. அம்பானி குடும்பத்தினரின் விலை உயர்ந்த ஆடம்பர பரிசுகள்..

ரூ.451 கோடியில் வைர நெக்லஸ்.. ரூ.240 கோடி ஜெட்.. அம்பானி குடும்பத்தினரின் விலை உயர்ந்த ஆடம்பர பரிசுகள்..

அம்பானி குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ஆடம்பர பரிசு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Ramya s
Published : Jan 11 2024, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிரபல தொழிலதிபரும் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவதற்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வலம் வருகிறது. குறிப்பாக, நீட்டா அம்பானி, தனது மருமகள் ஷ்லோகா மேத்தாவுக்கு 2019-ல் பரிசளித்த ரூ. 451 கோடி மதிப்பிலான நெக்லஸ் உட்பட, தனது ஆடம்பரமான பரிசுகளுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அம்பானி குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ஆடம்பர பரிசு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

28

நீதா அம்பானிக்கு பரிசாக வழங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கருப்பு பேட்ஜ் கார் :

முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டா அம்பானிக்கு இந்தியாவின் விலையுயர்ந்த எஸ்யூவியான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை தீபாவளி பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு ரூ. 10 கோடி ரூபாயாகும். தனிப்பயனாக்கப்பட்ட இந்த காரில் பல ஆடம்பர் அம்சங்கள் உள்ளன. நாட்டில் வெகு சிலரிடம் மட்டுமே இந்த கார் உள்ளது.

38

நீதா அம்பானிக்கு தனியார் ஜெட்:

2007 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி தனது 44 வது பிறந்தநாளில் 240 கோடி ரூபாய் மதிப்பிலான ஏர்பஸ் (A319) சொகுசு ஜெட் விமானத்தை பரிசாக வழங்கி தனது மனைவியை ஆச்சரியப்படுத்தினார். தனிப்பயனாக்கப்பட்ட அலுவலகம், கேபின் வசதிகள், ஒரு மாஸ்டர் பெட்ரூம், குளியலறையுடன் கூடிய மூட் லைட்டிங் கொண்ட ஸ்கை-பார் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த தனியார் ஜெட் விமானத்தில் உள்ளது.

48
Akash & slokha

Akash & slokha

ஷ்லோகா மேத்தாவுக்கு வழங்கப்பட்ட நெக்லஸ்:

ஷ்லோகா மேத்தா மற்றும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தின் போது, நீட்டா அம்பானி தனது மருமகளுக்கு ஆடம்பரமான  Mouawad L’ நெக்லஸை வழங்கினார். 451 கோடி மதிப்புள்ள இந்த நெக்லஸ் 18 காரட் தங்கக் கிளைகளுடன் 407.48 காரட் வைரத்தைக் கொண்டுள்ளது.

58

அனந்த் அம்பானிக்கு 18K Panthere de Cartier Brooch:

ஆகாஷ் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டுடன் ஆனந்தின் நிச்சயதார்த்தத்தின் போது, அவரது இளைய சகோதரருக்கு 18K Panthere De Cartier Brooch ஐ பரிசாக வழங்கினார். 51 நீலமணிகள், இரண்டு மரகதங்கள் மற்றும் 606 வெட்டப்படாத வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான ப்ரூச் சுமார் ரூ.13,218,876 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெள்ளை தங்கம், சபையர், மரகதம், ஓனிக்ஸ் மற்றும் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறுத்தை வடிவ பேட்ஜ் ஆகும். 

68

இஷா அம்பானியின் இரட்டையர்களுக்கான தனிப்பயன் அலமாரிகள்:

இஷா அம்பானிக்கு இரட்டையர்களான கிருஷ்ணா மற்றும் ஆதியா மீது தாத்தா பாட்டியான அம்பானி - நீட்டா தம்பதி தங்கள் அன்பைப் பொழிந்தனர், வெப்ப-காற்று பலூன், மேகம் மற்றும் விமான வடிவங்கள் கொண்ட செழுமையான தனிப்பயனாக்கப்பட்ட அலமாரிகளை பரிசாக வழங்கினார். அதன் சரியான விலை வெளியாகவில்லை, ஆனால்  இந்த பொருட்கள் லோரோ பியானா, ஹெர்மேஸ் மற்றும் டியோர் போன்ற ஆடம்பர பிராண்டுகளிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

78

அனந்த் அம்பானிக்கான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி வேகம்:

முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்தை தனது நிச்சயதார்த்த நாளில் ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். இந்த காரின் விலை ரூ. 4.5 கோடி ரூபாய் ஆகும். மலர்களால் மூடப்பட்டிருக்கும் நேர்த்தியான வாகனம், கொண்டாட்டத்திற்கு அழகு சேர்த்தது.

 

88

அம்பானி குடும்பம் விதிவிலக்கான ஆடம்பரமான பரிசுகள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் ஒருபோதும் தயக்கம் காட்டுவதே இல்லை. ஆடம்பர் பொருட்களை பரிசாக வழங்குவதன் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதுடன் ஆடம்பரத்திற்கான புதிய வரையறைகளை அமைத்து வருகின்றனர்..

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved