Dengue Fever: டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்க...என்ன உணவு சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது தெரியுமா?
Dengue Fever: டெங்குவால் பாதிக்கப்பட்டால் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கொசுக்களால் பரவும் நோய்களில் டெங்கு முக்கியமான நோயாகும். மழை காலம் துவங்கி விட்டாலே இந்தியாவில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படும். ஆனால், மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு 7 மடங்கு இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இதன் பாதிப்பு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும். இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை கிடைக்காத நோய்களில் டெங்கு வைரஸ் நோயும் ஒன்று ஆகும். இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். உணவிலும் இதே போன்ற மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
டெங்கு பாதிப்பின் அறிகுறிகள்:
டெங்குவால் பாதிக்கப்டுபவர்களுக்கு உடலில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதனுடன், நோயாளிக்கு காய்ச்சல், தோல் வெடிப்பு, தசை வலி, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும் .இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். குறிப்பாக, இந்த நேரத்தில் உடலை போதுமான நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். தவிர எளிதில் செரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் டயட்டில் வைத்திருக்கக்கூடிய உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
மஞ்சள் சாப்பிடலாம். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் எனில், தினமும் 1 கிளாஸ் மஞ்சள் பால் குடிக்கவும். உடல் விரைவில் குணமடையும்.
உங்கள் உணவில் சிட்ரஸ் பழங்களான ஆம்லா, கிவி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிப்பழங்கள், மாதுளை பப்பாளி மற்றும் காய்கறி சூப்களை தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கும் உதவி செய்கிறது.
2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், என்சைம்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இது உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. மேலும், உடலில் பலவீனமான உணர்வுகளை நீக்குகிறது. டெங்குவிலிருந்து விரைவாக குணமடைய நிறைய திரவம் எடுத்து கொள்ள வேண்டும்.
பப்பாளி இலை சாறு குடிப்பது டெங்குவிலிருந்து விரைவில் குணமடைய உதவும். இதில் சைமோபாபன், பாப்பைன் போன்ற பொருட்கள் உள்ளன. இது இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. தினமும் இந்த ஜூஸை 2ல் இருந்து 3 முறை குடிக்கலாம். தேவைப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.
உங்களுக்கு டெங்கு இருந்தால் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும். விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த துரித உணவு மற்றும் சர்க்கரை உணவுகள் நோயிலிருந்து குணமாவதை தாமதப்படுத்தும் என்பதால் இவற்றை இந்த வேளையில் தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.