‘மாமியாருக்கு பாய் பிரண்ட் தேவை’... மருமகள் கொடுத்த வினோத விளம்பரம்... 2 நாளைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
என் மாமியாருக்கு 2 நாட்கள் கம்பெனி கொடுக்க பாய் பிரண்ட் தேவை அதற்கு சம்பளமாக 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என மருமகள் ஒருவர் கொடுத்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 நாள் பாய் பிரண்டா இருந்தால் 72 ஆயிரம் சம்பளமா எங்கப்பா? என தேடாதீங்க. இப்படி ஒரு வினோத விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில், அந்நாட்டில் கேரைகிஸ்லிஸ்ட் என்ற கிளாசிஃபைடு இணையதளத்தில் தான் இப்படியொரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹாஸ்டன் வேலி பகுதியில் உள்ள 51 வயதான எனது மாமியாருக்கு 2 நாட்கள் பாய் பிரண்டாக இருக்க ஒருவர் தேவை. அவர் நல்லா ஜாலியா பேசக்கூடியவங்களாக இருக்க வேண்டும், நன்றாக டான்ஸ் ஆட தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். 40 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற கன்டிஷன்கள் எல்லாம் உள்ளது.
இந்த விளம்பரத்தை கொடுத்திருப்பது அந்த வயதான பெண்மணியின் மருமகள். அவங்க தன்னோட கணவருடன் 2 நாட்கள் வெளியே செல்வதால், தனிமையில் வாடும் மாமியாருக்கு கம்பெனி கொடுக்க இப்படி ஒரு நபரை விளம்பரம் மூலம் தேடி வருகிறாராம்.
அப்படி பாய் பிரண்ட்டாக வரும் நபருக்கு 2 நாளைக்கு 960 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமாம். அத்தோடு 2 நாளைக்கு மட்டுமே இருவரும் டேட்டிங் செல்லலாம் என அக்ரிமெண்டில் சைன் செய்ய வேண்டும் என்றும் மருமகள் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.