பாதவெடிப்பு அடிக்கடி வருதா? எலுமிச்சையை கொண்டு இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்க..நம்ப முடியாத பலன் கிடைக்கும்..
how to get rid of Cracked heels: காலில் ஏற்படும் பாதவெடிப்பு நீங்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம் தோல் வறண்டு போகும்போது பாதவெடிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு உடல் எடையினால் கூட பாதவெடிப்பு வரும். காலணிகள் அணியாமல் இருப்பவர்களுக்கு கரடுமுரடான பாதையில் நடப்பது வெடிப்பை உண்டாக்கும். பாதங்களை சுத்தமாக தேய்த்து குளிக்காமல், குதிகாலில் அழுக்கு சேர்ந்தாலும் பித்தவெடிப்பு வரும். பொருத்தமில்லாத காலணிகள்,ஷூக்கள் கூட வெடிப்புக்கு காரணமாக அமையும். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலர் கால்களுக்கு கொடுப்பதில்லை, அது தவறு என்கின்றனர் மருத்துவர்கள்.
தோலில் காணப்படும் வறட்சி, அதிக உடல் எடை பாத வெடிப்புக்கான பிரதான காரணம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தோல் வறட்சியாகி பாதங்களில் வெடிப்பு வரலாம். உணவில் நீர்ச்சத்துள்ளவைகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.
வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்த்து குளிப்பது தோல் வறட்சியை குறைக்க உதவும். கீரை, பயறுகள், பழ வகைகளை உண்ணவேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் காலில் இருக்கும் பித்தவெடிப்பு மறையும். கால்களை ஷூ அணிந்த பிறகு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். எப்போது வெளியில் சென்று திரும்பிய பிறகு காலை கழுவ வேண்டும். உங்களுடைய கால் அளவுக்கு ஏற்ற பொருத்தமான காலணிகளை அணியவேண்டும். இவற்றுக்கு பிறகும் காலில் பித்த வெடிப்பு தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
தினமும் மிதமான சூடுள்ள நீரில் பாதத்தைக் கழுவி வாருங்கள். அதன் பின் காலையிலும் இரவிலும் பாதங்களுக்கு மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு வராது. அதற்கு பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை கிரீம் ஆகியவை கடைகளில் கிடைக்கும்.
பாதவெடிப்பு நீங்க...
1. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சரிசமமாக எடுத்து கொள்ளுங்கள். இதில் மஞ்சள் கலந்து, இரவில் கால்களில் பூசிவிட்டு படுங்கள். பாதவெடிப்பு சிலநாள்களில் மறையும்.
2. பித்தவெடிப்பு இருந்தால் வெந்நீரில் கல்உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து கால்களை கொஞ்ச நேரம் அதில் வைக்க வேண்டும். பிறகு கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்டால் டெட் செல்களை நீங்கி கொஞ்ச நாளில் வெடிப்பு மறையும். தொடர்ந்து செய்யுங்கள்.
3. வெறும் எலுமிச்சை பழத்தை வலியில்லாத பித்த வெடிப்பில் தேய்த்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு காலில் உணர்ச்சி இருக்காது. அவர்கள் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். பாதவெடிப்பால் வரும் வலி அவர்களுக்கு உணர்ச்சியை கொடுக்காது. வெடிப்புகள் அதிகம் இருந்தால் மென்மையான செருப்பை பயன்படுத்துங்கள். மூடிய வகை செருப்புகளை போட வேண்டும். பாதவெடிப்புகளால் வலியோ, தொற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.