Constipation Cure: தினமும் மலம் கழிப்பதில் சிரமமா? இவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்..!
Constipation Cure: நீங்கள் தினமும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள்? என்றால் இவற்றை உங்கள் உணவில் தினசரி சேர்த்து வைத்து கொள்ளுங்கள்.
மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள், மலச்சிக்கல் பிரச்சனை உண்டாவது உறுதி. ஏனெனில், மேற்கத்திய உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள் ஆகும்.
மலச்சிக்கல் என்பது ஆரோக்கியமற்ற குடல் காரணமாக எழும் பிரச்சனையாகும்.அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்க வேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். மலச்சிக்கலில் இருந்து விடுபடவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள உணவு பட்டியல்.
constipation
விளக்கெண்ணெய்:
இளவெந்நீர், குடலின் அசைவுகளை அதிகரிக்க உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம்.மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும்.
ஓட்ஸ் சாப்பிடுங்கள்:
ஓட்ஸில் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது புரோபயாடிக் செயல்பாடுகளைக் கொண்ட கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. ஓட்ஸ் நுகர்வு நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, செரிமானத்தைச் சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்
நெய் சாப்பிடுங்கள்:
உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள். நெய் மலச்சிக்கலைப் போக்க வல்லது. ஆயுர்வேத சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நெய் நம் உடலை மற்றும் குடல் பாதையை சுத்தமாக வைத்திருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து கொண்ட உணவுகள்:
நார்ச்சத்து கொண்ட பசலை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழு தானியங்கள், கொட்டை வகைகள், வெந்தயம் போன்றவை மலச்சிக்கலை சரிசெய்வதில் சிறந்த பங்களிப்பை தர வல்லது.