Hill Stations: சென்னைக்கு அருகில் அட்டகாசமான 4 மலைவாசஸ்தலங்கள்! மிஸ் பண்ணாதீங்க!
சென்னைக்கு அருகில் இருக்கும் 4 அட்டகாசமான மலைவாசஸ்தலங்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது? என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

Hill Stations: சென்னைக்கு அருகில் அட்டகாசமான 4 மலைவாசஸ்தலங்கள்! மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னைக்கு அருகில் இருக்கும் அட்டகாசமான 5 மலைவாசஸ்தலங்கள் குறித்து பார்க்கலாம்.
ஏலகிரி (Yelagiri)
சென்னையில் இருந்து 230 கிமீ தொலைவில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து 19 கிமீ தூரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. அமைதியான ஏரிகள், அழகிய பசுமையான பள்ளத்தாக்குகள், அழகான ரோஜா தோட்டங்கள் என ஏலகிரி மலைத்தொடர் உங்கள் மனதை கொள்ளையடிக்கும். பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கு ஏலகிரி பெயர்பெற்றது.
எப்படி செல்வது?
சென்னையில் இருந்து காரில் ஏலகிரிக்கு 4 மணி நேரத்தில் சென்று விட முடியும். மலைப்பாதையில் கொண்டை ஊசி வழியாக பயணிப்பது பசுமையான நினைவுகளைத் தரும். சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ஜோலார்பேட்டை வழியாக செல்லும். ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஹார்ஸ்லி ஹில்ஸ்
ஹார்ஸ்லி ஹில்ஸ் (Horsley Hills)
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி என்ற இடத்தின் அருகே ஹார்ஸ்லி ஹில்ஸ் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 274 கிமீ தொலைவில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1290 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹார்ஸ்லி மலை உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை தரும். இருபுறமும் மரங்களால் சூழப்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் செல்வது கவலைகளை பறந்தோடச் செய்யும்.
எப்படி செல்வது?
சென்னையில் இருந்து வேலூர், சித்தூர், மதனப்பள்ளி வழியாக ஹார்ஸ்லி ஹில்ஸ் சென்றடையலாம். சென்னையில் இருந்து சித்தூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஹார்ஸ்லி ஹில்ஸ்க்கு செல்லலாம். மதனப்பள்ளியில் இருந்து ஆந்திர அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காப்பர் பாட்டில் யூஸ் பண்றீங்களா? அப்போ இத படிங்க! இல்லைனா டேஞ்ஜர்
நாகலாபுரம் மலை
நாகலாபுரம் மலை ( Nagalapuram Hills)
சென்னையில் இருந்து வெறும் 70 கிமீ தொலைவில் ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் நாகலாபுரம் மலைத்தொடர் அமைந்துள்ளது. சுமார் 213 அடி உயரம் உள்ள நாகலாபுரம் மலைத்தொடர் டிரக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இங்குள்ள நாகலாபுரம் அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வனப்பகுதியில் குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி அருவியில் குளியல் போடுவது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்.
எப்படி செல்வது?
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் ஊத்துக்கோட்டையில் இருந்து 13 கிமீ தொலைவில் நாகலாபுரம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கார் அல்லது பைக்கில் செல்லலாம். அரசு பேருந்துகளில் நாகாலாபுரம் சென்று விட்டு அங்கு இருந்து ஆட்டோ அல்லது கார்களில் மலைப்பகுதியை அடையலாம். சென்னையில் இருந்து ரயிலில் நகரி சென்று விட்டு அங்கு இருந்து 29 கிமீ பேருந்தில் நாகலாபுரம் செல்லலாம்.
ஏற்காடு
ஏற்காடு (Yercaud)
'ஏழைகளின் ஊட்டி' என அழைக்கப்படும் ஏற்காடு சென்னையில் இருந்து 366 கிமீ தொலைவில் ஏற்காடு அமைந்துள்ளது. இயற்கை அழகின் தாயகமான ஏற்காட்டில் பசுமை நிறைந்த மரங்கள், ஏரி உங்களின் மனதை குளிர்விக்கும்.
இங்கு ஆண்டுதோறும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏற்காடு மலையில் அணில்கள், முயல்கள், முயல்கள், நரிகள், காட்டெருமை, மான்கள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் செல்வதே ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும். ஸ்வான் வடிவ படகுகளுடன் கூடிய பிரமிக்க வைக்கும் ஏற்காடு ஏரி பயணிகளின் வருகைக்கு பெரும் காரணமாக உள்ளது.
எப்படி செல்வது?
சென்னையில் இருந்து கார் அல்லது பேருந்துகளில் சேலம் சென்று அங்கு இருந்து ஏற்காடு சென்றடையலாம். சேலத்தில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து சேலத்துக்கு தினமும் ஏராளமான ரயில்கள் உள்ளன.
நீங்கள் வாங்கும் மாத்திரை தாளில் சிவப்பு கோடு மற்றும் ரகசிய குறியீடு இருந்தால் கவனமாக இருங்கள்!