பலூன் போல் பெரிதாகி கொண்டே போகும் வயிறு... வினோத நோயால் அவதிப்படும் பெண்!
சீனாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நாளுக்கு நாள் வயிறு பெரிதாகிக்கொண்டே சொல்லும் வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார். அது பற்றிய தகவலை தான் பார்க்க போகிறோம்...
சீனாவை சேர்ந்த இந்த பெண் தான் வித்தியாசமாக வயிறு வீங்கி கொண்டே போகும் நோயால் நாளுக்கு நாள் அவதி பட்டு வருகிறார்.
மிகவும் ஒல்லியாக இவர் இந்த போதிலும், வயிறு பருமன் அடைவதால் தற்போது இவருடைய உடல் எடை 121 பவுண்டாக உள்ளது.
இப்படி வயிறு ஒரு நிலையை தாண்டி வளர்ந்துள்ளதால் நிம்மதியாக தூங்குவதற்கு கூட அவதி பட்டு வருகிறார்.
தன்னுடைய அன்றாட பணிகளை கூட செய்ய இவருடைய வயிறு மிகப்பெரிய தடையாக உள்ளது.
இவருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களை சரிவர பார்த்து கொள்ள முடியாமல், இவர்களை இந்த பெண்ணின் பெற்றோர் தான் பார்த்து கொள்கிறார்களாம்.
இப்படி வயிறு வலியுடன் பலூன் போல் பெரிதாகி கொண்டே போவதால் யுவாங்... மருத்துவரை அணுகியபோது, அவர்கள் பல டெஸ்டுகள் எடுத்தனர். மேலும் வயிறு வலி குறைவதற்கான மாத்திரைகள் எடுத்து கொண்டு வயிறு வலி குறைந்தாலும் வயிறு தொடர்ந்த வீங்கி கொண்டே தான் சென்றுள்ளது.
மருத்துவர்கள் இவரை பரிசோதித்து பார்த்தபோது, கல்லீரல் நோய், கர்ப்பப்பை புற்று நோய், வயிற்றுக்குள் தேவையில்லாமல் கட்டி உருவாகுதல், அடி வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் தேவையற்ற நீர் சுரப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் வயிறு பலூன் போல் பெரிதாகிக்கொண்டே போவதற்கான சரியான காரணத்தை அவர்களால், கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் யுவாங் விரைவில் இந்த வினோத நோயில் இருந்து குணமடைந்து மற்றவர்களை போல் வாழ்வேன் என கூறியுள்ளார்.