- Home
- Lifestyle
- Black Garlic vs White Garlic : கருப்பு பூண்டை விட வெள்ளை பூண்டு சிறந்ததா? உண்மையான விளக்கம்!!
Black Garlic vs White Garlic : கருப்பு பூண்டை விட வெள்ளை பூண்டு சிறந்ததா? உண்மையான விளக்கம்!!
கருப்பு பூண்டு மற்றும் வெள்ளைப்பூண்டு இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Black Garlic vs White Garlic
கருப்பு பூண்டு ஒரு புதிய வகை பூண்டு அல்ல. சாதாரண பூண்டை சில வாரங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் வைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இந்த நொதித்தல் போன்ற செயல்முறையால், பூண்டு கருப்பாக மாறி, காரத்தன்மை குறைந்து, மென்மையான இனிப்பு சுவையைப் பெறுகிறது.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
சாதாரண பூண்டில் உள்ள அல்லிசின், அதன் காரமான வாசனை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு காரணம். ஆனால், கருப்பு பூண்டில் அல்லிசின் நிலையான ஆன்டிஆக்ஸிடன்ட்களாக மாறுகிறது. குறிப்பாக, S-allyl cysteine எளிதில் உறிஞ்சப்படுவதால், இது சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
எது நல்லது?
பலருக்கு வெள்ளை பூண்டு அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் கருப்பு பூண்டு குறைவான காரத்தன்மை கொண்டதால், வயிற்றுக்கு இதமானது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்று.
கருப்பு பூண்டின் நன்மைகள்
கருப்பு பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தையும், கல்லீரலையும் பாதுகாக்கிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு பற்கள் சாப்பிடுவது நல்லது. இதை நேரடியாகவோ அல்லது சமையலிலோ பயன்படுத்தலாம்.
கருப்பு பூண்டு நல்லது. ஆனால்..
கருப்பு பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் இது எந்த நோய்க்கும் மருந்து அல்ல. சீரான உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தம் மெலிவதற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது நல்லது.
குறிப்பு: மேலே உள்ள தகவல்கள் அடிப்படைத் தகவல்களுக்காக மட்டுமே. உடல்நலம் தொடர்பான ஆலோசனைகளுக்கு மருத்துவரை அணுகுவது சிறந்தது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

