MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Idli Batter: இட்லி மாவு சீக்கிரம் புளிக்க எந்த பாத்திரம் பெஸ்ட்? பிளாஸ்டிக் டப்பாவில் மாவு வைக்கலாமா?

Idli Batter: இட்லி மாவு சீக்கிரம் புளிக்க எந்த பாத்திரம் பெஸ்ட்? பிளாஸ்டிக் டப்பாவில் மாவு வைக்கலாமா?

Idli Batter: நமது வீடுகளில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது இட்லி மற்றும் தோசை செய்வது வழக்கமாகும். அதற்காக மாவு அரைத்து புளிக்க வைக்க எந்த பாத்திரம் பெஸ்ட்? பிளாஸ்டிக் டப்பாவில் மாவு வைக்கலாமா? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 06 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தோசை மற்றும் இட்லி மாவு
Image Credit : AI generated images

தோசை மற்றும் இட்லி மாவு

நமது வீடுகளில் வாரத்துக்கு ரெண்டு நாளாவது இட்லி, தோசை கண்டிப்பாக‌ இருக்கும். மாவு அரைச்சு புளிக்க வைக்கிறது ஒரு பெரிய வேலை. நைட் முழுக்க அல்லது குறைந்தது 8 மணி நேரமாவது மாவை புளிக்க வைக்கணும். இப்படி அரைச்ச மாவை எந்த பாத்திரத்துல ஸ்டோர் செஞ்சா உடம்புக்கு நல்லதுன்னு இப்போ பார்க்கலாம். இதனுடன், மாவு நன்றாகப் புளிப்பதற்கு சரியான அளவு உப்பைச் சேர்ப்பதும், சீதோண நிலைக்கேற்ப வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதும் மாவு சீக்கிரம் பொங்கிவர உதவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிளாஸ்டிக் பாத்திரம் அல்லது டப்பா
Image Credit : AI generated images

பிளாஸ்டிக் பாத்திரம் அல்லது டப்பா

இப்போலாம் கிச்சன் முழுக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் தான் அதிகமா இருக்கு. ஏர்-டைட் டப்பா என்றாலே பிளாஸ்டிக் தான். தரமான, பிளாஸ்டிக் டப்பாவுல மாவை வைக்கலாம். ஆனா, விலை குறைவான பிளாஸ்டிக் டப்பாக்கள் மாவு புளிக்கும் வேகத்தை குறைப்பதோடு, சுவையையும் கெடுத்துடும். ஆரோக்கியத்துக்கும் இது நல்லதில்லை. குறிப்பாக, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான மாவைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் அது நச்சு வேதிப்பொருட்களை உணவில் கசியச் செய்ய வாய்ப்புள்ளது.

எவர்சில்வர் பாத்திரம்

நம்ம ஊருல முக்கால்வாசி பேர் எவர்சில்வர் பாத்திரங்களை தான் பயன்படுத்துறாங்க. உணவுப் பொருட்களை வைக்க இது ரொம்பவே பாதுகாப்பானது. இந்த பாத்திரங்கள் மாவில் எந்த கெமிக்கலையும் கலக்காது. கழுவுறதும் ரொம்ப ஈஸி. ஃபேஸ்புக்ல இருக்குற பலரும் எவர்சில்வர் பாத்திரம் தான் பெஸ்ட் சாய்ஸ்னு சொல்றாங்க. எவர்சில்வர் பாத்திரங்கள் நீண்ட காலம் உழைப்பதோடு, மாவின் தன்மையை மாற்றாமல் இயற்கையான சுவையைத் தக்கவைக்க பெரிதும் உதவுகின்றன.

34
அலுமினியம் பாத்திரம்
Image Credit : AI generated images

அலுமினியம் பாத்திரம்

இட்லி, தோசை மாவில் இயற்கையாகவே இருக்கும் லாக்டிக் ஆசிட், அலுமினிய பாத்திரத்தோடு ரியாக்ட் ஆகும். மாவு புளிக்கும்போது இந்த பாத்திரம் தேய்மானம் அடைந்து, அதில் உள்ள உலோகத் துகள்கள் மாவில் கலக்க அதிக வாய்ப்பு இருக்கு. அதனால அலுமினியத்தை தவிர்ப்பது நல்லது. உலோக நச்சுத்தன்மை உடலுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், புளிப்புத் தன்மை கொண்ட மாவுகளுக்கு அலுமினியப் பாத்திரங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

44
செம்பு பாத்திரம்
Image Credit : AI generated images

செம்பு பாத்திரம்

தோசை, இட்லி மாவை செம்பு பாத்திரத்துல கண்டிப்பாக‌ ஸ்டோர் செய்யக் கூடாது. புளிப்பான உணவுகள் செம்பு பாத்திரத்தோடு சீக்கிரமா ரியாக்ட் ஆகிடும். இது மாவில் கெமிக்கல் நச்சுத்தன்மையை உருவாக்குவதோடு, மாவின் சுவையையும் பாதுகாப்பையும் முழுமையா கெடுத்துடும். செம்புடன் அமிலத்தன்மை வினைபுரியும் போது மாவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுவதுடன், கடுமையான வயிற்று உபாதைகளையும் வாந்தியும் கூட வரவழைக்கக்கூடும் என்பதால் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இறுதியாக, மாவு புளிக்க வைப்பதற்கு எவர்சில்வர் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், சுவைக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion Facts: வெங்காயம் வெட்டும்போது கண்களில் தண்ணீர் வருவது ஏன்? இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Lost Key: சாவி தொலைந்துவிட்டதா? பூட்டை சேதப்படுத்தாமல் வீட்டுக்குள் செல்ல இதை செய்யுங்க!
Recommended image3
13 நிமிட ட்ரிக்..! அவித்த முட்டையை உரிக்கவே கஷ்டமா? தோல் ஈஸியாக கழன்றுவிட இதை மட்டும் செய்யுங்க!
Related Stories
Recommended image1
Bun Dosa : இட்லி, தோசை போரடிக்குதா? இப்படி பன் தோசை செஞ்சு பாருங்க; சாஃப்ட்டா, ஸ்பாஞ்ச் மாதிரி இருக்கும்!
Recommended image2
Idli Origin: இட்லி நம்ம ஊர் உணவே இல்லையா? தினமும் சாப்பிடும் இட்லியின் அசல் வரலாறு இதுதான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved