MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சிறு சிறு சேமிப்பில் பெரிய லாபத்துடன் வளமான வாழ்க்கை! பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்!

சிறு சிறு சேமிப்பில் பெரிய லாபத்துடன் வளமான வாழ்க்கை! பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்!

நாளை வாழ்க்கைய திறம் பட அடியெடுத்து வைக்க நினைக்கும் பெண்களே, இந்த சிறு சிறு சேமிப்பு திட்டங்கள் உங்களுக்காகத்தான். இன்றைய சிறு சேமிப்பு நாளைய வளமான வாழ்க்கைகு அடித்தளம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Jun 13 2023, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்காக பெற்றோரும், குடும்ப தலைவிகள் தங்களுக்கென ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும். பெண்களுக்கென அரசு மற்றும் வங்கிகள் தரும் சிறப்பான சிறு சேமிப்பு திட்டங்களை இதில் காணலாம்.
 

26
மகிளா சேமிப்பு திட்டம்

மகிளா சேமிப்பு திட்டம்

பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என்று பெரியடப்பட்டுள்ள இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். சேமிப்பு பணத்திற்கு 7.5% நிலையான வட்டி வழங்கப்படும். மேலும், இதில் சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு
 

36
செல்வ மகள் சேமிப்பு திட்டம்

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில், மாதம் குறைந்த பட்சம் ரூ.50 செலுத்தியும் கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து 9 வயதுக்குள் கணக்கை தொடங்கிவிட வேண்டும்.

கணக்கு தொடங்கப்படும் நாளில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில், குழந்தைக்கு 18 வயது பூர்த்தி ஆகும் போது நீங்கள் செலுத்திய பணத்தின் வட்டியுடன் பாதித்தொகையை கல்வி மேற்படிப்பு அல்லது குறிப்பிட்ட காரணங்களுக்காக நீங்கள் பெற்று கொள்ளலாம். மீதித்தொகை அல்லது முழுத் தொகை பெண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தி அடையும் போது பெற்று கொள்ளும் வசதியும் உண்டு.
 

46
தொடர் வைப்பு கணக்கு (RD)

தொடர் வைப்பு கணக்கு (RD)

தபால் அலுவலகத்திலும், அனைத்து வங்கிகளிலும் அந்த தொடர் வைப்பு கணக்கு சேமிப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை இதன் மூலம் சேமிக்க முடியும். குறைந்த பட்சம் மாதம் 500ரூ முதல் சேமித்து வரலாம்.

குடும்ப தலைவிகளுக்கும், வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கும் ஏற்ற திட்டம் இதுதான். தொடர் வைப்பு கணக்கு தொடங்கும் போதே முடிவு காலத்தை 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் என குறித்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் செலித்தி வரை உங்கள் கால வரையை முடிவில், நீங்கள் செலுத்திய தொகையுடன் வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.

மறந்தும் தானமாக இந்த 1 பொருளை கொடுக்காதீங்க!! மீறினால் துரதிர்ஷ்டமும் தரித்திரமும் உங்களை ஆட்டிப் படைக்கும்!!

56
ஃபிக்சட் டெபாசிட் (FD)

ஃபிக்சட் டெபாசிட் (FD)

ஃபிக்சட் டெபாசிட் என்பது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சேமிப்பு முறையாகும். உங்களிடம் உள்ள ரொக்கப் பணத்தை வங்கி அல்லது தபால் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு செலுத்தி மாதந்தோறும் நிலையான வருமானத்தை பெறலாம். உங்கள் முதலீடுகளில் அதிகபட்சமாக 7% முதல் 8.50% வரை வருமானம் ஈட்ட முடியும்.

வீட்டில் பணம் குவிய! வாஸ்துப்படி இந்த திசையில் சிவனின் போட்டோவை வைங்க போதும்!!
 

66
தங்க நகைகள் சேமிப்பு (Gold scheme)

தங்க நகைகள் சேமிப்பு (Gold scheme)

தங்க நகைகளை விரும்பாத பெண்களே இல்லை எனக் கூறலாம். மேலும், தங்கத்தில் செய்யும் முதலீடு எப்போதுமே வீண் போகாது. இளம் பெண்கள், இல்லத்தரசிகள் சிறு தொகையை நம்பிக்கையான நகைக்கடைகளில் செலுத்தி குறிப்பிட்ட மாத முடிவில் செய்கூலி, சேதாரமின்றி நகைகளை பெற்றுக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் தங்க நகைகளை வங்கிகளில் அடகாக வைத்து தேவையான பண உதவியையும் பெறலாம்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved