- Home
- Lifestyle
- Countertop Dishwasher: பட்ஜெட் விலையில் டிஷ்வாஷர்! இனி பாத்திரம் தேய்க்கிற கவலையே இல்லை!
Countertop Dishwasher: பட்ஜெட் விலையில் டிஷ்வாஷர்! இனி பாத்திரம் தேய்க்கிற கவலையே இல்லை!
Countertop Dishwasher: தினமும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது போரடிக்கிறதா? இனி கவலை வேண்டாம். இப்போது பட்ஜெட் விலையிலேயே டிஷ்வாஷர் கிடைக்கிறது. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாத்திரம் கழுவுவது பெரும் வேலை
இன்றைய காலக்கட்டத்தில் ஆண் மட்டுமின்றி பெண்களும் வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை உள்ளது. வேலைக்கு பெண்கள் அலுவலகத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து வேலை செய்வது மட்டும்ன்றி வீட்டிலும் ஓய்வு எடுக்க முடியாமல் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்ய வேண்டியதுள்ளது. அதுவும் பாத்திரம் குவிந்து விட்டால் அதை கழுவுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
பட்ஜெட் விலையில் Countertop Dishwasher
இந்த நிலையில் பெண்களுக்கு கைகொடுக்கும் வகையில் பாத்திரங்களை கழுவி கொடுக்கும் Midea டிஷ்வாஷர் (Midea Dishwasher) பட்ஜெட் விலையில் வந்துள்ளது. இந்த டிஷ்வாஷரில் ஒரே நேரத்தில் தட்டுகள், கிண்ணங்கள், கிளாஸ்கள் மற்றும் ஸ்பூன்கள் போன்ற பல பாத்திரங்களை வைத்து சுத்தம் செய்யலாம். இது சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் போதுமானதாக இருக்கும். இதில் 6 விதமான வாஷ் புரோகிராம்கள் உள்ளன. பாத்திரங்களில் உள்ள அழுக்கைப் பொறுத்து, சரியான மோடைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
49% தள்ளுபடியுடன் பட்ஜெட் விலை
எண்ணெய், மசாலா மற்றும் காய்ந்துபோன உணவு கறைகளை நீக்கும் 'இன்டென்சிவ் வாஷ்' வசதியும் இதில் உள்ளது. இந்திய சமையலில் பயன்படுத்தும் மசாலா, எண்ணெய் பிசுக்கை இது எளிதாக நீக்கிவிடும். கையால் பாத்திரம் கழுவுவதை விட இந்த டிஷ்வாஷர் குறைவான தண்ணீரைத்தான் பயன்படுத்தும். இதனால் தண்ணீர் பயன்பாடு குறைகிறது.
அதிக வெப்பநிலையில் பாத்திரங்களைக் கழுவுவதால், பாக்டீரியா மற்றும் கிருமிகள் அழிந்துவிடும். இதனால் பாத்திரங்கள் மிகவும் சுத்தமாக இருக்கும். இந்த Midea கவுன்ட்டர்டாப் டிஷ்வாஷர் தற்போது அமேசான் தளத்தில் 49% தள்ளுபடி போக வெறும் ரூ.14,990 விலையில் கிடைக்கிறது. நடுத்தர மக்களுக்கு விலை கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் இதை வாங்கி போட்டால் பாத்திரம் கழுவும் வேலையும், நேரமும் மிச்சமாகும்.
Midea டிஷ்வாஷர் சிறப்பம்சங்கள்
குறைவான இடவசதி போதும்: இது ஒரு 'கவுன்ட்டர்டாப்' (Countertop) மாடல் என்பதால், சமையலறை மேடையிலேயே மிகக் குறைந்த இடத்தில் வைத்துவிடலாம். பெரிய மாற்றங்கள் செய்யத் தேவையில்லை.
அதிக சத்தம் இருக்காது: பொதுவாக இந்த மாடல்கள் 49 முதல் 52 dB (டெசிபல்) அளவில் மட்டுமே சத்தம் எழுப்பும். எனவே, வீட்டில் அமைதியான சூழல் கெடாது.
பிரத்யேக டிடர்ஜென்ட்: சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்புகளை இதில் பயன்படுத்தக் கூடாது. டிஷ்வாஷருக்கான பிரத்யேக பவுடர்/திரவம், உப்பு மற்றும் ரின்ஸ் எய்ட் (Rinse Aid) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆற்றல் சேமிப்பு: இது குறைந்த மின்சாரத்தை மட்டுமே நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாத்திரங்களை முழுமையாக உலர வைக்கும் டிரையிங் (Drying) வசதியும் இதில் உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

