அடேங்கப்பா!! வெறும் வயித்துல செவ்வாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?!
Red Banana Health Benefits : தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Red Banana in tamil
பிஸியான வாழ்க்கை முறையில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலர் உடற்பயிற்சியுடன் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதை அல்லது குடிப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் நீங்களும் உங்கள் நாளில் தொடக்கத்தை ஆரோக்கியமாக மாற்ற விரும்பினால் உங்களுக்காக ஒரு பெஸ்ட் டிப்ஸ் சொல்லப் போகிறோம்.
red banana nutrition in tamil
அது வேற ஏதும் இல்லைங்க..வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஆம் மஞ்சள், பச்சை வாழைப்பழத்தை விட செவ்வாழைப்பழத்தில் தான் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: 'செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா? சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!!
Red Banana health benefits
தினமும் காலை வெறும் வயிற்றில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது. எனவே தினமும் இந்த வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய்க்கு எதிர்த்துப் போராடக் கூடிய ஆற்றல் உங்களது உடலுக்கு கிடைக்கும்.
உடலில் ஆற்றலை அதிகரிக்கும்:
செவ்வாழைப்பழத்தில் சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளன. அவை உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கும். எனவே காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொள்ளலாம்.
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது:
சிவப்பு வாழைப்பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குறிப்பாக வயது அதிகரிப்பால் ஏற்படும் கண் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இந்த பழம் பெரிதும் உதவுகின்றது.
Red Banana on empty stomach
எடையை குறைக்க உதவும்:
தினமும் காலை வெறும்பயிற்றில் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர வைக்கும். இதனால் பசி எடுக்காது மற்றும் அதிகம் சாப்பிடுவதும் கட்டுப்படுத்தப்படும். இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
மனநிலையை மேம்படுத்தும்:
செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளன. இது டிரிப்டோபனை செடோடோனினாக மாற்ற பெரிதும் உதவுகிறது. செடோடோனின் என்பது ஒரு நல்ல ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் மனநிலையை அதிகரிக்கிறது மற்றும் மனசோர்வின் அறிகுறிகளை போக்கும்.
நாள்பட்ட நோயை தடுக்கும்:
பல பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே செவ்வாழைப்பழத்திலும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கலால் செல்கள் சேதம் அடைவதை தடுத்து, பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களை குறைக்கும்.
இதையும் படிங்க: ஆண் மக்களே! "அந்த" பிரச்சனையால் கவலைபடுறீங்களா? அப்ப 21 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கஇனி இருக்காது..!
health benefits of red banana in tamil
சரும ஆரோக்கியத்திற்கு:
தினமும் காலை வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியம் மேம்படும். அதாவது இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகின்றன. இது தவிர, இது முழு ஆரோக்கியத்திற்கும் உதவும்.
முக்கிய குறிப்பு: நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும். அதுவும் வெறும் வயிற்றில் தான். இப்படி நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தான் விரைவில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எதிர்மறையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.