MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மாதுளை நல்லது தான்! ஆனா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மாதுளை நல்லது தான்! ஆனா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் ஒரு சின்ன கப் மாதுளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 02 2024, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pomegranate Health Benefits

Pomegranate Health Benefits

அனைவருக்கும் பிடித்த பழங்களில் மாதுளையும் ஒன்று. பலரும் மாதுளை பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தினமும் ஒரு சின்ன கப் மாதுளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? ஒரு மாதம் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டால் நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும், நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதுளையில் இருக்கும் சத்துக்கள் 

1.கலோரிகள் 72
2.கொழுப்பு 1 கிராம்
3.நிறைவுற்ற கொழுப்பு 0.1கிராம்
4.கார்போஹைட்ரேட்டுகள் 16கிராம்
5.சோடியம் 2.6மில்லி கிராம்
6.சர்க்கரை 11.9கிராம்
7.நார்ச்சத்து 3.48கிராம்
8.புரதம் 45 கிராம்
9.பொட்டாசியம் 205 மில்லி கிராம்

25
Pomegranate Health Benefits

Pomegranate Health Benefits

ரத்த அழுத்தம் குறையும்

தினமும் மாதுளை சாப்பிடுவதால், ரத்த அழுத்த பிரச்சனை வராது. உங்களுக்கு ரத்த அழுத்தம், ஹைப்பர் டென்ஷன் பிரச்சனைகள் இருந்தால் தினமும் இந்த மாதுளை விதைகளை சாப்பிட்டால் போதும். மாதுளை ஜூஸ் குடிச்சாலும் ஹைப்பர் டென்ஷன் குறையுமாம்.

மாதுளையால் தொற்றுகள் குறையும்

மாதுளை பழம சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து குறைவு.  எனவே தினமும் மாதுளை சாப்பிடுவதால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

35
Pomegranate Health Benefits

Pomegranate Health Benefits

ஞாபக சக்தி அதிகரிக்கும் .

தினமும் ஒரு சின்ன கப் மாதுளைபழம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம். தொடர்ந்து நான்கு வாரங்கள் தொடர்ந்து இந்த விதைகளை சாப்பிட்டாலோ, அல்லது ஜூஸ் குடித்தாலோ புத்தி கூர்மை அதிகரிக்குமாம். மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

மாதுளை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது என்றும் மாதுளை ஜூஸ் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாகவும் சில ஆய்வுகள் காட்டுகின்றன. பொதுவாக கெட்ட கொழுப்பு  தமனிகளில் படிந்துவிடும். இது  மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

45
Pomegranate Health Benefits

Pomegranate Health Benefits

மறுபுறம் நல்ல கொழுப்பு, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கல்லீரலுக்கு கொண்டு சென்று உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைப்பதிலும், நல்ல கொழுப்பை அதிகரிப்பதிலும் உதவுவதன் மூலம், மாதுளைகள் இதய நோய்கள் அல்லது இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

புற்றுநோய் அறிகுறிகளைக் குறைக்கும் மாதுளை..

எந்த உணவும் புற்றுநோயை முழுமையாகத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது என்றாலும்  மாதுளை சாறு, பழம் புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள், அத்துடன் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நல்ல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கியமாக மாதுளை தோல் புற்றுநோய் வராலம் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

55
Pomegranate Health Benefits

Pomegranate Health Benefits

சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு உதவும் மாதுளை

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் சிறுநீரக கற்களுக்கு ஒரு ஆபத்து காரணி. மாதுளை பழச்சாறு, அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், அழற்சி எதிர்ப்பு விளைவுகளுடன், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved