தாறுமாறான நன்மைகள் தரும் பிரவுன் அரிசி....தெரிந்தால் அசந்து போவீர்கள்..!
பிரவுன் அரிசி என்ப்து ஒரு அற்புதமான அரிய வகை அரிசி ஆகும். நம் இது உடலுக்கு தேவையான வைட்டமின் பி-யை வழங்குகிறது. இதில் அக்சிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. இவ்ற்றின் நன்மை குறித்து காணலாம்.
இந்திய உணவகங்களில் அரிசி இன்றியமையாத பொருளாக இருந்து வருகிறது. தற்போது மக்கள் அரோக்கியமாக வாழ தங்கள் உடல் நலனில்மிகுந்த அக்கறை காட்டி வருகிறனர். இதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணுகின்றனர். அந்த வகையில் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசியை பயன்படுத்துகின்றனர்.
பிரவுன் அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவாசிய தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் எடையை கட்டுப்படுத்த எளிதாக்குகிற்து. இந்த அரிசியானது வெளிப்புற உமியை அகற்றி தயாரிக்கப்படுகிறது.
பிரவுன் அரசி ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் மாங்க்னீசு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் இதற்கு உண்டு. மேலும் இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட ஒரு மூலப்பொருள் இருப்பதால், இதை சாப்பிட்ட் பிறகு இரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தாது.
எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த அரிசி சிறந்தாக காணப்படும். இதன் ஆண்டிஆக்சிடன்ட்கள் நச்சுத்தன்மையை குறைக்க உதவும். அதேவேளையில், இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை எளிதில் போக்க உதவுகிறது. பிரவுன் அரசியானது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேதும் இது இதய நோய்களின் அபாயத்தை தடுக்க உதவுகிறது.
பிரவுன் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சீரான செரிமானத்தை உண்டாக்குகிறது. இந்த அரிசியை ட்ய்ட்டில் இருக்கும் ஒருவர் சேர்த்து கொள்ளும் போது வழக்கமான மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கங்கள் நடைபெரும்.
எலும்புகளின் கணிச்சமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் பிரவுன் அரிசி உள்ளது. கால்சீய்ம் மற்றும் மெக்னீசிய்ம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் இது எலும்பின் கனிமமயமாக்களைத் தணிக்கவும் உதவுகிறது.
தூக்கமின்மை உள்ளவர்கள் இந்த அரிசியை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் அமினோ ஆசிட் உள்ள்து. இது மூளையை அமைதி நிலையில் வைக்க உதவுகிது. அது போல பிரவுன் அரிசியில் தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனான மெலடோனின் அதிக செறிவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது ஒருவரின் தூக்க சுழற்சியை மேம்படுத்தி நல்ல உறக்கத்தையும், தூக்கமின்மை பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும்.
பிரவுன் அரிசி வழங்கும் மற்றொரு முக்கிய நன்மை மனஅழுத்தத்தை குறைக்கிறது. குறிப்பாக இது பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த மனநல நிலைமையை வழங்குகிறது. இது மனநிலை தொந்தரவுகள், மன சோர்வுகள், சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த முடிவுகளை வழங்குகிறது.