MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bathroom Cleaning Tips: 10 நிமிட மேஜிக்: பாத்ரூம் டைல்ஸ் கறைகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

Bathroom Cleaning Tips: 10 நிமிட மேஜிக்: பாத்ரூம் டைல்ஸ் கறைகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

Bathroom Cleaning Tips: குளியலறை மற்றும் சமையலறை டைல்ஸ்களில் உள்ள கறைகளை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிதாக சுத்தம் செய்யலாம். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 05 2026, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குளியலறை டைல்ஸ் கறைகளை போக்க டிப்ஸ்
Image Credit : AI

குளியலறை டைல்ஸ் கறைகளை போக்க டிப்ஸ்

வீட்டின் அழகை தீர்மானிப்பதில் பளபளப்பான குளியலறை டைல்ஸ் மற்றும் சமையலறை சுவர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால், அங்கு படியும் சோப்பு அழுக்கு, எண்ணெய் பிசுக்கு, உப்புக்கறை போன்றவை நாளடைவில் அதன் பொலிவை மங்கச் செய்துவிடும். அதிக விலை கொடுத்து ரசாயனங்களை வாங்குவதை விட, வீட்டில் உள்ள பேக்கிங் சோடா, வினிகர் போன்ற பொருட்களைக் கொண்டு வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் இந்த கறைகளை எளிதாக நீக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாத்ரூம் கறைகளை விரட்டும் மேஜிக் கலவை
Image Credit : Getty

பாத்ரூம் கறைகளை விரட்டும் மேஜிக் கலவை

சாதாரண அழுக்குகளை நீக்க, டைல்ஸ் மீது பேக்கிங் சோடாவைத் தூவிவிட்டு வெள்ளை வினிகரை ஸ்ப்ரே செய்யுங்கள். நுரைத்து வரும் இந்த கலவையை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பழைய பிரஷ் அல்லது மென்மையான ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் பழைய பளபளப்பு திரும்பிவிடும்.

நீண்ட நாட்களாக படிந்திருக்கும் பிடிவாதமான உப்புக்கறைகளுக்கு சற்று கடுமையான அணுகுமுறை தேவை. கல் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிதளவு துணி துவைக்கும் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளுங்கள். இதை கறைகள் மீது தடவி 10 நிமிடம் ஊறவைத்த பின் தேய்த்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

எந்தவொரு புதிய கலவையை பயன்படுத்தும் முன்பும், டைல்ஸின் ஒரு சிறிய பகுதியில் பரிசோதித்து பார்ப்பது பாதுகாப்பானது. சமையலறை அடுப்புக்கு அருகில் தெறிக்கும் எண்ணெய் துளிகளை உடனுக்குடன் வெதுவெதுப்பான நீர் மற்றும் டிஷ் சோப் கொண்டு துடைத்துவிடுவது ஒட்டும் படலம் உருவாவதை தடுக்கும்.

34
டைல்ஸ் இடுக்குகளும், பராமரிப்பு முறைகளும்
Image Credit : Getty

டைல்ஸ் இடுக்குகளும், பராமரிப்பு முறைகளும்

மேற்பரப்பை மட்டும் சுத்தம் செய்தால் போதாது, டைல்ஸ்களுக்கு இடையே உள்ள கிரவுட் (grout) எனப்படும் இடுக்குகளையும் கவனிக்க வேண்டும். இங்கு பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் கலந்த கெட்டியான பேஸ்ட்டை தடவி 10 நிமிடம் கழித்து பிரஷ்ஷால் தேய்த்துச் சுத்தம் செய்யலாம். சிமெண்ட் அடிப்படையிலான இடுக்குகளில் அடிக்கடி வினிகர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சுத்தம் செய்த பிறகு டைல்ஸ்களில் நீர் வடுக்கள் தங்காமல் இருக்க, சுத்தமான மைக்ரோஃபைபர் துணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும். குறிப்பாக கருப்பு நிற டைல்ஸ்களில் தண்ணீர் காய்ந்த பின் உருவாகும் வெள்ளை திட்டுக்கள் அப்பட்டமாகத் தெரியும். குளித்து முடித்ததும் சுவர்களில் உள்ள தண்ணீரை உலர்ந்த துணியால் அகற்றும் பழக்கம் சோப்புப் படிவங்களை பெருமளவு குறைக்கும்.

மேட் பினிஷ் கொண்ட டைல்ஸ்களில் தூசியை முதலில் உலர்ந்த துணியால் தட்டிவிட்டு, பிறகு மிதமான சோப்பு கலந்த வெந்நீரால் துடைப்பதே சரியான முறை. நேரடியாக ஈரத்துணியை வைத்தால் தூசியும் நீரும் சேர்ந்து சேறு போலாகிவிடும்.

44
செய்யக்கூடாத தவறுகள்
Image Credit : Getty

செய்யக்கூடாத தவறுகள்

பளபளப்புக்காக தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தரையில் தடவச் சொல்லும் சில இணைய குறிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இது கடுமையான வழுக்கல் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறிய கீறல்களுக்கு பாலிஷ் உதவலாம், ஆனால் உடைந்த டைல்ஸ்களை மாற்றுவதே ஒரே தீர்வு.

இதேபோல் அம்மோனியா போன்ற வீரியமான ரசாயனங்களை ப்ளீச்சிங் பவுடருடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. இது உயிருக்கு ஆபத்தான நச்சு வாயுக்களை உருவாக்கும். அதேபோல, இயற்கைக் கற்களால் ஆன தரைகளில் அமிலத்தன்மை கொண்ட வினிகரை பயன்படுத்தினால் மேற்பரப்பு சேதமடைய வாய்ப்புள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
D-Mart Bill Shock: ரூ.1,000-க்கு மட்டும் பொருட்கள் வாங்கப் போய் ரூ.3,000 பில் வருவது ஏன்? நடுத்தர மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம்!
Recommended image2
Trending Golu Decoration : டிரெண்டிங் நவராத்திரி கொலு அலங்காரம்..இந்த ஐடியாக்களை டிரை பண்ணிப் பாருங்க!
Recommended image3
Homemade Coconut oil : வீட்டிலேயே ஈஸியாக தேங்காய் எண்ணெய் செய்யலாம்..இதோ எளிய செய்முறை
Related Stories
Recommended image1
Toilet Cleaning Tips: டாய்லெட் கறைகளுக்கு எண்ட் கார்டு.. இந்த ஒரு பொருள் போதும்.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Bedroom Cleaning: படுக்கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.. இந்த 5 விஷயங்களை மறக்காம செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved