MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bedroom Cleaning: படுக்கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.. இந்த 5 விஷயங்களை மறக்காம செய்யுங்க!

Bedroom Cleaning: படுக்கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.. இந்த 5 விஷயங்களை மறக்காம செய்யுங்க!

Bedroom Cleaning: படுக்கையறையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மற்றும் தூசுகள் உள்ளன. இவற்றை நீக்க வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட் துவைத்தல், மெத்தையை வெயிலில் வைத்தல் உள்ளிட்ட 5 எளிய முறைகளை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 28 2026, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
படுக்கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்
Image Credit : chat gpt

படுக்கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்

தினமும் காலையில் எழுந்ததும் பெட்ஷீட்டை உதறி விரித்து, தலையணையை அடுக்கி வைப்போம். படுக்கை சுத்தமாக இருந்தால், அறையே சுத்தமாகிவிட்டதாக நினைப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், படுக்கையில் தான் தூசு, வியர்வை, இறந்த செல்கள் அதிகம் இருக்கும். பெட்ஷீட்டை மாற்றுவதால் மட்டும் இந்த கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள் போகாது.

இதனால் அலர்ஜி, மூக்கடைப்பு, அரிப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரும். அதனால், தினமும் வீட்டைச் சுத்தம் செய்வதோடு, வாரத்துக்கு ஒரு முறையாவது படுக்கையறையை 'டீப் கிளீனிங்' செய்ய வேண்டும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கு அதிக நேரம் ஆகாது, வெறும் 30-40 நிமிடங்களில் இந்த 5 விஷயங்களைச் செய்து முடித்துவிடலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. படுக்கையில் இருந்து தொடங்குங்கள்
Image Credit : chat gpt

1. படுக்கையில் இருந்து தொடங்குங்கள்

வாரத்துக்கு ஒரு முறை பெட்ஷீட், தலையணை உறை, நீளத் தலையணை உறை ஆகியவற்றை சுடுநீரில் துவைக்க வேண்டும். மெத்தையை வேக்யூம் கிளீனர் வைத்து நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூம் கிளீனர் இல்லை என்றால், மெத்தையை 2 மணி நேரம் வெயிலில் காய வையுங்கள். தலையணைகளையும் வெயிலில் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள தூசுப் பூச்சிகள் செத்துவிடும்.

2. திரைச்சீலைகள், ஜன்னல்

படுக்கையறையில் உள்ள திரைச்சீலைகளில் நிறைய தூசு ஒட்டியிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை அதை உதறி விடுங்கள் அல்லது லேசாக வேக்யூம் செய்யுங்கள். ஜன்னல் கிரில்கள், ஸ்லைடிங் கதவுகளின் இடுக்குகளை ஈரமான பிரஷ் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது டிரஸ்ஸிங் டேபிளைத் துடைத்து விட்டால், அறை உடனடியாகப் பளிச்சென்று மாறிவிடும்.

34
3. எலக்ட்ரானிக் பொருட்கள்
Image Credit : chat gpt

3. எலக்ட்ரானிக் பொருட்கள்

ஏசி, ஃபேன் இறக்கைகள், டியூப் லைட் போன்றவற்றில் படியும் தூசு, அறைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை காய்ந்த துணியால் ஃபேன் இறக்கைகளைத் துடையுங்கள். சைட் டேபிள், பீரோவின் மேல் பகுதி, ஸ்விட்ச் போர்டு போன்ற இடங்களை கிருமிநாசினி ஸ்ப்ரே அடித்துத் துடையுங்கள்.

44
4. கட்டிலுக்கு அடியிலும் கவனம் செலுத்துங்கள்
Image Credit : AI Image

4. கட்டிலுக்கு அடியிலும் கவனம் செலுத்துங்கள்

கட்டிலுக்கு அடியில், பீரோவுக்குப் பின்னால், ஜன்னல் மூலைகளில் தான் அதிக தூசு சேரும். இந்த இடங்களை நாம் தினமும் பெருக்க மாட்டோம். அதனால், வாரத்துக்கு ஒரு முறை ஈரத்துணி அல்லது மாப் வைத்து இந்த மூலைகளைத் துடையுங்கள். கட்டிலுக்கு அடியில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள். அப்போதுதான் காற்று நன்றாகப் போய் வரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrichor Science: மழை பெய்ததும் வரும் மண் வாசனைக்கு என்ன பெயர் தெரியுமா?
Recommended image2
House Construction: வீட்டு சுவரில் விரிசல் வரக்கூடாதா? கட்டும்போதே இந்த 5 விஷயங்களை கவனிங்க!
Recommended image3
Hotel Room: ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கா? ஈஸியா கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Bedroom False Ceiling: படுக்கையறையை அழகாக்கும் ஃபால்ஸ் சீலிங்.. டாப் 5 மாடர்ன் டிசைன்கள்!
Recommended image2
Bedroom Decor : படுக்கையறையை அழகாக்க 8 எளிய மற்றும் சுலபமான டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved