பாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்கள் - குழந்தைகள்! பரவசப்படுத்தும் புகைப்பட தொகுப்பு!

First Published Dec 11, 2019, 7:07 PM IST

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்பது. அவரது கவிதைகளை, இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அவரின் புகழை போற்றி வருகின்றனர்.

 

அதே வேலையில், சென்னையில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தில், அவருக்கு பல்லாக்கு தூக்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பாரதியாரின் பல்லாக்கை தூக்கினார்.

 

பாரதியாரின் பல்லாக்கு வலம் வரும் போது, அதனை வரவேற்று... பாரதியாரின் பாடலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பரதம் ஆடி அவருடைய பல்லாக்கை வரவேற்றனர். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...