- Home
- Lifestyle
- Refrigerator Mistake : ஃபிரிட்ஜ் யூஸ் பண்றப்ப இந்த ஒரு விஷயத்தை மாத்திட்டா போதும்! கரண்ட் பில் கம்மியா வரும்
Refrigerator Mistake : ஃபிரிட்ஜ் யூஸ் பண்றப்ப இந்த ஒரு விஷயத்தை மாத்திட்டா போதும்! கரண்ட் பில் கம்மியா வரும்
குளிர்காலத்தில் ஃப்ரிட்ஜில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையெனில் கரண்ட் பில் அதிகமாக வருவதுடன், ஃப்ரிட்ஜும் சேதமடைய வாய்ப்பு உள்ளன.

தற்போது எல்லாரும் வீட்டிலும் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் இருக்கும். குளிர்காலத்தில் நீங்கள் பிரிட்ஜ் பயன்படுத்தும்போது சில முக்கிய மாற்றங்களை அதில் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் கரண்ட் பில் அதிகமாக வருவது மட்டுமின்றி, ஃப்ரிட்ஜும் சேதமடைய வாய்ப்பு உள்ளன.
குளிர்காலத்தில் ரொம்பவே குளிர்ச்சியாக இருப்பதால் பிரிட்ஜுக்கு குறைவான குளிர்ச்சியை போதுமானது. எனவே உங்கள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜின் Thermostat -யை குறைவான குளிர்ச்சியில் வைக்கவும். இப்படி வைப்பது மூலம் ஃப்ரிட்ஜ் குறைவாக வேலை செய்யும், மின்சாரமும் குறைந்த அளவில் தான் செலவிடப்படும். மின்கட்டணமும் உயராது. முக்கியமாக ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவது குறையும்.
ஆனால், ஒற்றைக்கதவு மற்றும் நேரடி குளிர்ச்சி கொண்ட ஃப்ரிட்ஜில் குளிர்காலத்தில் பனி அதிகமாக உருவாகும். மேலும் இந்த மாடல் கொண்டு ஃப்ரிட்ஜ் பனியை தானாக அகற்றி விடாது.
குளிர்காலத்தில் 15 முதல் 20 நாட்கள் ஒருமுறை கண்டிப்பாக ப்ரீசரில் இருக்கும் பனியை அகற்ற வேண்டும். அப்போதுதான் ஃப்ரீசரின் செயல் திறனானது அதிகரிக்கும்.
மாறிவரும் சூழ்நிலையால் ஃப்ரிட்ஜை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஃப்ரிட்ஜுக்கு பின்னால் இருக்கும் வலையை நன்கு சுத்தமாக வைக்கவும். ஃப்ரிட்ஜை முழுவதுமாக சுத்தம் செய்த பிறகு சுமார் 24 மணி நேரம் திறந்து வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் நீடிக்கும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் குளிர்காலம் மட்டுமல்ல எந்த பருவத்திலும் ஃப்ரிட்ஜ் பாதுகாப்பாக இருக்கும். மின் கட்டணமும் அதிகமாகாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

