சிறுநீரக நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்.. இல்லைன்னா கிட்னிக்கு தான் ஆபத்தாம் உஷாரா இருங்க..
kidney patient avoid food: சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இங்கு காணலாம்.
சிறுநீரகப் பிரச்சனைகள் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இன்றைய காலத்தில் வீட்டு உணவை விட வெளிஉணவுகளை அதிகம் சாப்பிடுவதே அதற்கு காரணம். துரித உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரகம் சீக்கிரம் பழுதடையும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் வெளி உணவுகளை விட வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். அவர்கள் சில உணவுகளை தவிர்க்காமல் இருந்தால், சிறுநீரக பிரச்சனைகள் அதிகரிக்கும்.
சிறுநீரக நோயாளிகள் சாப்பிட்ட உடனேயே தூங்கக்கூடாது. முளைத்த விதைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட பழங்களின் சாறு, பச்சை சாலட் போன்றவை அதிகம் எடுக்க வேண்டும். இவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீரக நோயாளிகள் எந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் நல்லதல்ல. இவை சிறுநீரக ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. சிறுநீரக நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கும் நல்லதல்ல. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது.
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இறைச்சியை அதிகம் உண்பதால் சிறுநீரகம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகம் நான் வெஜ் உண்பவர்களின் சிறுநீரக ஆரோக்கியம் விரைவில் பாதிக்கும்.
சிறுநீரக நோயாளிகள் தக்காளியை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். தக்காளியும், தக்காளி விதைகளும் சிறுநீரக ஆரோக்கியத்தில் மோசமான விளைவை உண்டாக்கும்.
இதையும் படிங்க: PCOS.. இந்த பிரச்சனை இருக்க பெண்கள் பால் அருந்த கூடாதா? நீர்க்கட்டிகள் பிரச்சனை கட்டுக்குள் வர என்ன செய்யனும்
சிறுநீரக நோயாளிகள் புரதச்சத்துக்காக அதிகம் பருப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தளவு எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் அவ்வப்போது பரிசோதித்து ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை உண்ணுங்கள்.
இதையும் படிங்க: தினமும் ஒரு கப் தயிர்.. அட நீண்ட நாட்கள் வாழ சுலபமான டிப்ஸ் கூட இருக்கா? சூப்பர் மந்திரங்கள் இதோ...