MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Parenting Tips : குழந்தைகளோட ரொம்ப தூரம் டிராவல் பண்றீங்களா? இந்த உணவை மட்டும் கொடுக்காதீங்க!!

Parenting Tips : குழந்தைகளோட ரொம்ப தூரம் டிராவல் பண்றீங்களா? இந்த உணவை மட்டும் கொடுக்காதீங்க!!

குழந்தைகளை கூட்டிட்டு நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு சில உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Sep 05 2025, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Child Travel Food Safety
Image Credit : Freepik

Child Travel Food Safety

பொதுவாக குழந்தைகள் என்றாலே சென்சிடிவ் ஆனவர்கள் தான். அவர்களுக்கு எல்லாவிதமான உணவுகளும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக அவர்களை நீண்ட தூரம் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு கொடுக்கும் உணவு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருப்பது பெற்றோரின் கடமை. ஆனால் குழந்தைகள் விரும்பும் உணவுகளை மட்டுமே பெற்றோர்கள் எடுத்துச் செல்வார்கள். அது தவறு. அப்படியானால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்? எதை கொடுக்கக்கூடாது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

25
குழந்தைகளின் செரிமான மண்டலம்
Image Credit : stockPhoto

குழந்தைகளின் செரிமான மண்டலம்

குழந்தைகளின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்காது. இதனால் அவர்களுக்கு எல்லா விதமான உணவுகளும் எளிதில் ஜீரணமாகாது. அப்படி ஜீரணமாகாத உணவை அவர்களுக்கு கொடுத்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் ரொம்பவே சிரமப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் பயணத்தின் போது குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை தான் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் அவர்களது ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் நன்றாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பயணத்திற்கு முன்பும் குழந்தைகளின் செரிமானத்தை பாதிக்கும் உணவுகளை ஒருபோதும் கொடுக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்கவே வேண்டாம்.

Related Articles

Related image1
Parenting Tips : குழந்தைகளை 'ப்ளே ஸ்கூல்' கண்டிப்பா சேர்க்கனுமா? பெற்றோர் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
Related image2
Parenting Tips : உங்க குழந்தை எலும்பும் தோலுமா இருக்காங்களா? கொழு கொழுன்னு மாற இதை செய்ங்க!!
35
பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெய் உணவுகள்
Image Credit : stockPhoto

பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெய் உணவுகள்

நீண்ட பயணத்தின் போது குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அது அவர்களின் செரிமானத்தை மந்தமாக்கும் இதனால் வாயு, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுபோல சிப்ஸ், கேக், பிஸ்கட், சாக்லேட், போன்ற பதப்படுத்தப்பட்ட் உணவுகளையும் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் குழந்தைகள் நீரிழிப்பு, வயிற்று வலி, வாந்தி குமட்டல் தலை சுற்றலால் பாதிக்கப்படுவார்கள்.

45
குளிர்பானங்கள்
Image Credit : freepik

குளிர்பானங்கள்

பல சமயங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பசிக்கும்போதெல்லாம் கொடுப்பதற்காகப் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் அல்லது ஜூஸ்களை எடுத்துச் செல்வார்கள். இந்த உணவுகளில் சர்க்கரை மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளது, இவை சிறிய குழந்தைகளுக்கு வீக்கம் அல்லது வாயுவை ஏற்படுத்தும். எனவே, பயணத்தின்போது குழந்தைகளுக்குத் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்.

55
இவையும் ஆபத்து!
Image Credit : stockPhoto

இவையும் ஆபத்து!

- நீண்ட பயணத்தின் போது முளைகட்டிய தானியங்கள், சாலட்கள் எடுத்துச் செல்வதை பெற்றோர்கள் தவிர்க்கவும். அவற்றைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும், விஷமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாது.

- பயணத்திற்கு முன் குழந்தைகளுக்கு சிக்கன், மட்டன், மீன் போன்ற காரமான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டாம். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

- தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களை நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் பாக்டீரியாக்களும் வளரும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இந்த மாதிரியான உணவுகளையும் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.

என்ன கொடுக்க வேண்டும்?

பயணத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவு லேசானதாகவும், புதிதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்காக, பெற்றோர்கள் பயணத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிச்சடி போன்ற உணவுகள், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களைத் தேர்வு செய்யலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்
குழந்தைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Parenting Tips : குழந்தைகளை 'ப்ளே ஸ்கூல்' கண்டிப்பா சேர்க்கனுமா? பெற்றோர் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
Recommended image2
Parenting Tips : உங்க குழந்தை எலும்பும் தோலுமா இருக்காங்களா? கொழு கொழுன்னு மாற இதை செய்ங்க!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved