கவனம்.. இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் துணை மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம்..
உங்கள் துணை உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் குறிக்கும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தம்பதிகளோ அல்லது காதலர்களோ ஒரு வலுவான மற்றும் நிறைவான உறவைப் பராமரிப்பது என்பது இருவருக்கும் உள்ள சமமான பொறுப்பாகும். உறவை வலுவாக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் மட்டும், அந்த உறவு இனிமையானதாக இருக்காது. அந்த உறவு நிலைக்க வேண்டும் இருவருமே முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அந்த உறவு சிக்கலானதாகவே இருக்கும். உங்கள் துணை உறவில் மகிழ்ச்சியற்றதாக இருக்கலாம் அல்லது அதிருப்தி அடையலாம்.
எனவே உங்கள் துணை மகிழ்ச்சியாக இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு உறவும் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், ஆழ்ந்த அதிருப்தியை குறிக்கும் நிலையான அல்லது நடத்தைகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். உங்கள் துணை உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் குறிக்கும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
உங்கள் துணையின், பேசும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கலாம். முன்பு அதிகமாக பேசிய அவர்கள் தற்போது குறைவாக பேசக்கூடியவர்களாக இருக்கலாம். அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் கவலைகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கலாம். உரையாடல்கள் குறையும் அதே நேரத்தில், பேச தொடங்கியது சண்டையில் முடிந்தார் அது உங்கள் துணையின் அதிருப்தியைக் குறிக்கலாம்.
பொதுவாக உங்கள் உங்களிடம் தனித்து இருப்பது போலவோ அல்லது, பதிலளிக்காதவராகவோ இருக்கலாம். உங்கள் மீது இருந்த பாசம் குறைந்ததாக தோன்றலாம். அவரின் செயல்பாடுகள் மற்றும் நெருக்கமான தருணங்களில் இருந்து விலகி, இருவரிடையே இருந்த விரிசல் அதிகரிக்கலாம்.
உங்கள் துணை, முக்கியமான செயல்கள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றில் குறைந்த உற்சாகத்தைக் காட்டினால், அது அவர்களின் மகிழ்ச்சியற்ற தன்மையைக் குறிக்கலாம். அவர்களின் உறவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்க மாட்டார்கள்.
உங்கள் கவலைகள் மற்றும் பிரச்சனைகளில் உங்கள் துணை ஆர்வமில்லாதவர்களாக இருக்கலாம். மேலும் உங்களுக்கு ஆதரவு தேவைப்படும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை உங்கள் துணை வழங்காமல் போகலாம். இது உறவின் அடித்தளத்தை மேலும் கஷ்டப்படுத்தலாம்.
அடிக்கடி உங்களை விமர்சிப்பது அல்லது எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது ஆகியவை காரணமாக உங்கள் துணையின் கிழ்ச்சியற்ற தன்மை வெளிப்படும். உங்கள் பங்குதாரர் அடிக்கடி அதிருப்தியை வெளிப்படுத்தலாம், அற்பமான விஷயங்களைப் பற்றி பேசலாம் அல்லது அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடலாம். இத்தகைய எதிர்மறையானது உறவுக்குள் மோசமான சூழலை உருவாக்கும்.
வெளிப்படையான மற்றும் நேர்மையான செயல்கள் ஆரோக்கியமான உறவின் அடித்தளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தவொரு அடிப்படைச் சிக்கல்களையும் தீர்க்க ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், வலுவான மற்றும் நிறைவான உறவை உருவாக்கலாம்.