Amazing Animals: ஆண் துணை இல்லாமலேயே குட்டி போடும் உயிரினங்கள்! ஆச்சரியமூட்டும் தகவல்!
Amazing Animals: ஆண்-பெண் இணை சேராமல் குட்டி போட முடியுமா? முடியும் என்கிறது அறிவியல். ஆண் துணையே இல்லாமல் சில உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த ஆச்சரியமான உயிரினங்கள் குறித்து பார்ப்போம்.
15

Image Credit : Pixabay
ஆண் துணையில்லாமல் குட்டி போடும் உயிரினங்கள்
தேனீக்கள், எறும்புகள், கொமோடோ டிராகன்கள் என ஆண் துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் பல உயிரினங்கள் இயற்கையில் உள்ளன. இந்த செயல்முறைக்கு பார்த்தினோஜெனிசிஸ் என்று பெயர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Getty
தேனீக்கள் (Honey bees)
தேனீக்கள் ஆண்-பெண் சேர்க்கை இல்லாமலேயே உருவாகின்றன. கூட்டத்தில் இருக்கும் ராணித் தேனீ, ஆண் தேனீயுடன் சேராமலேயே முட்டைகளை இடும். இந்த கருவுறாத முட்டைகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்கள் (ட்ரோன்கள்) பிறக்கின்றன.
35
Image Credit : stockPhoto
எறும்புகள், குளவிகள்
எறும்புகள் (Ants): இவையும் பார்த்தினோஜெனிசிஸ் மூலமே தங்கள் சந்ததியை உருவாக்குகின்றன. இவற்றில் ஆண்-பெண் சேர்க்கை நடப்பதில்லை. குளவிகள் (Wasps): குளவிகளிலும் இனப்பெருக்கத்திற்கு ஆண் துணை தேவைப்படுவதில்லை. அவை தாமாகவே இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன.
45
Image Credit : Getty
கொமோடோ டிராகன்கள், பாம்புகள்
கொமோடோ டிராகன்கள் (Komodo Dragons): ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் இந்த ராட்சத பல்லிகள், ஆண் துணையில்லாமலே குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை.பாம்புகள் (Snakes): மலைப்பாம்புகளில் சில வகைகள் (ரெட்டிகுலேட்டட் போன்றவை) ஆண் துணையின்றி குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. இந்த பாம்புகள் தாமாகவே முட்டையிட்டு, அவற்றை அடைகாத்து குஞ்சுகளை உருவாக்குகின்றன.
55
Image Credit : Getty
சுறாக்கள் (Sharks)
கடல்வாழ் உயிரினங்களிலும் இந்த பார்த்தினோஜெனிசிஸ் முறை காணப்படுகிறது. குறிப்பாக, பிளாக்டிப் மற்றும் ஜீப்ரா சுறா போன்ற சில சுறா இனங்களில், ஆண் சுறாவுடன் சேராமலேயே பெண் சுறா குட்டிகளை ஈனுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

