- Home
- Lifestyle
- Aluminium Foil: கதவு கைப்பிடியில் அலுமினியம் ஃபாயில்..! வைரல் ஹோம் செக்யூரிட்டி ட்ரிக்.! இது ஒர்க் அவுட் ஆகுமா?
Aluminium Foil: கதவு கைப்பிடியில் அலுமினியம் ஃபாயில்..! வைரல் ஹோம் செக்யூரிட்டி ட்ரிக்.! இது ஒர்க் அவுட் ஆகுமா?
Aluminum Foil Door Handle Hack: கதவு கைப்பிடியில் அலுமினிய ஃபாயில் சுற்றும் பாதுகாப்பு தந்திரம் பலனளிக்குமா? இது திருடர்களிடமிருந்து வீட்டைப் பாதுகாக்குமா என்பது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்.

Aluminum Foil Door Handle Hack
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீட்டுப் பாதுகாப்பு குறிப்புகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இரவு நேரத்தில் கதவின் கைப்பிடியில் அலுமினியத் தாளை (Aluminum Foil) சுற்றி வைக்கும் தந்திரம் ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. யாராவது கதவைத் திறக்க முயன்றால், ஃபாயில் கசங்கும் சத்தம் கேட்டு உஷாராகிவிடலாம் என்பதே இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை. ஆனால், இந்த வைரல் தந்திரம் எந்தளவுக்கு உண்மையானது? என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் - Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?
கதவு கைப்பிடியில் அலுமினியம் ஃபாயில்
இந்த யோசனையின்படி, இரவு தூங்கச் செல்வதற்கு முன் கதவு கைப்பிடியை அலுமினியம் ஃபாயிலால் முழுவதுமாக மூடிவிட்டால், வெளியிலிருந்து யாரேனும் கைப்பிடியைத் திருப்பும்போது அது சுருங்கியோ அல்லது கிழிந்தோவிடும். சில சமயங்களில் அது சத்தத்தையும் எழுப்பக்கூடும் என்பதால், வீட்டிலிருப்பவர்கள் விழித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. காலையில் எழுந்து பார்க்கும்போது ஃபாயில் சேதமடைந்திருந்தால், இரவில் யாரோ வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் - Kitchen Safety: சமையலறையில் இந்த 6 பொருட்கள் இருந்தால் பேராபத்து! உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.!
நிபுணர்கள் சொல்வது என்ன?
பாதுகாப்பு நிபுணர்களைப் பொறுத்தவரை, இது ஒரு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு கிடையாது. இது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட அல்லது காவல்துறை பரிந்துரைக்கும் ஒரு முறையும் அல்ல. மாறாக, இது ஒரு தற்காலிக எச்சரிக்கை அறிகுறியாக மட்டுமே இருக்க முடியும் என்று அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். மிகவும் மெதுவாக கைப்பிடியைத் திருப்பினால் அல்லது கதவை உடைக்க வேறு வழிகளைக் கையாண்டால், இந்த ஃபாயில் தந்திரம் எந்தப் பலனையும் அளிக்காது. எனவே, இதை மட்டுமே நம்பி இருப்பது பாதுகாப்பற்றது என்பதே நிபுணர்களின் வாதம். உண்மையில், வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும்போது கைப்பிடிகளில் சாயம் படாமல் இருக்க ஃபாயில் சுற்றுவதுதான் அதன் உண்மையான மற்றும் பரவலான பயன்பாடாக இருக்கிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இதையும் படியுங்கள் - Biriyani vs Pulao: பிரியாணியும் புலாவும் ஒண்ணு இல்ல... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
உண்மையான பாதுகாப்புக்கு என்ன வழி?
வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த வைரல் தந்திரங்களை நம்புவதை விட, நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது. உயர்தர டெட்போல்ட் (Deadbolt) பூட்டுகளைப் பயன்படுத்துவது, சிசிடிவி கேமராக்கள் அல்லது வீடியோ வசதி கொண்ட டோர்பெல்களைப் பொருத்துவது போன்றவை உண்மையான பாதுகாப்பை வழங்கும். மேலும், இரவு நேரங்களில் வீட்டின் முன்புற விளக்குகளை எரியவிடுவதும், ஜன்னல் மற்றும் கதவுப் பூட்டுகளை அவ்வப்போது சரிபார்ப்பதும் அவசியம்.
இதையும் படியுங்கள் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!
இதுவே நிதர்சனதான உண்மை
ஆக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைத்தையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. அலுமினிய ஃபாயில் தந்திரம் சில சமயங்களில் ஒரு சிறிய அறிகுறியைக் காட்டலாமே தவிர, அது சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்களுக்கு மாற்றாகாது. உறுதியான பூட்டுகள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகளே உங்கள் வீட்டிற்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும் என்பதே நிதர்சனம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

