MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா.. சிங்கிள்ஸின் டேட்டிங்கில் புகுந்த AI.. சுவாரஸ்ய ரிப்போர்ட்!

எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா.. சிங்கிள்ஸின் டேட்டிங்கில் புகுந்த AI.. சுவாரஸ்ய ரிப்போர்ட்!

AI in Dating: 'ஐல்' டேட்டிங் ஆப் சர்வே அறிக்கையின்படி, இந்திய சிங்கிள்ஸ் காதலில் ஏஐயை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த சர்வேயின் முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 10 2026, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிங்கிள்ஸின் லவ் ஸ்டோரியில் புகுந்த ஏஐ
Image Credit : AI

சிங்கிள்ஸின் லவ் ஸ்டோரியில் புகுந்த ஏஐ

இன்றைய டிஜிட்டல் உலகில் சரியான பார்ட்னரைத் தேடுவதும், டேட்டிங் செய்வதும் எளிதான விஷயம் அல்ல. தவறாக அனுப்பப்படும் ஒரு சிறிய செய்தி கூட மொத்த உறவையும் காலி செய்துவிடும் என்பதால், காதல் விஷயத்தில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்று இந்திய சிங்கிள்ஸ் இப்போது AI (செயற்கை நுண்ணறிவு) உதவியை நாட ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் பிரபலமான டேட்டிங் ஆப்களில் ஒன்றான 'ஐல்' (Aisle) சமீபத்தில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய இளைஞர்கள் காதலுக்கும் டேட்டிங்கிற்கும் AI-ஐ எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 8,240 சிங்கிள்ஸ் இந்த சர்வேயில் கலந்துகொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேட்ச் மேக்கர் அல்ல, ஏஐ ஒரு 'விங்மேன்'
Image Credit : pexels

மேட்ச் மேக்கர் அல்ல, ஏஐ ஒரு 'விங்மேன்'

சர்வே முடிவுகளின்படி, இந்தியர்கள் AI-ஐ நேரடியாக ஜோடி சேர்த்து வைக்கும் 'மேட்ச் மேக்கராக' பார்க்கவில்லை. மாறாக, தங்களுக்கு உதவி செய்யும் ஒரு நெருங்கிய நண்பன் அல்லது 'விங்மேன்' (Wingman) போல மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அட்ராக்டிவ் பயோ: டேட்டிங் ஆப்களில் தங்களது 'பயோ' எழுதவும், தங்களை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் வெளிப்படுத்தவும் 46 சதவீத மக்கள் AI உதவியை நாடியுள்ளனர்.

மெசேஜ் செக்கிங்: தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு, "தான் டைப் செய்துள்ள செய்தி சரியாக உள்ளதா?" என்று 51.2 சதவீத பேர் AI-யிடம் சோதித்துப் பார்க்கின்றனர். அதில் தேவையான திருத்தங்கள் செய்த பிறகே அந்தச் செய்தியை அனுப்புகின்றனர்.

34
நண்பர்களை விட ஏஐ மீது அதிக நம்பிக்கை
Image Credit : AI

நண்பர்களை விட ஏஐ மீது அதிக நம்பிக்கை

53.1 சதவீத பெண்கள் தங்களது உணர்வுபூர்வமான குழப்பங்களுக்கும், காதல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண, தோழிகளை விட ஏஐயே அதிகம் நம்புகின்றனர். "நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மை ஜட்ஜ் செய்வார்கள். ஆனால், ஏஐ நமது கதையைப் பொறுமையாக கேட்டு, எந்தப் பாரபட்சமும் இல்லாமல் அறிவுரை வழங்கும்" என்பது பெண்களின் கருத்தாக உள்ளது.

ஆண்களும் பெண்களும்: AI பயன்பாட்டில் உள்ள வித்தியாசங்கள்

டேட்டிங் களத்தில் ஆண்களும் பெண்களும் AI-ஐப் பயன்படுத்தும் விதத்தில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.

ஆண்களின் அணுகுமுறை: 48 சதவீத இளைஞர்கள் பயோ எழுத ஏஐயை பயன்படுத்துகின்றனர். மேலும், பெண்களுக்கு அனுப்பும் 'முதல் மெசேஜை' டிராஃப்ட் செய்ய 38.6 சதவீத இளைஞர்கள் AI உதவியை நாடுகின்றனர்.

பெண்களின் அணுகுமுறை: பெண்களின் சிந்தனை இதில் முற்றிலும் மாறுபட்டுள்ளது. "மனதில் இருப்பதை ஏஐ மூலமாக வெளிப்படுத்தினால் அதில் உண்மை இருக்காது" என்று 60.5 சதவீத பெண்கள் கருதுகின்றனர். எனவே ஏஐ மூலமாக எழுதப்பட்ட முதல் செய்தி என்று தெரியவந்தாலே, 51.9 சதவீத பெண்கள் அதை உடனே நிராகரித்துவிடுகின்றனர்.

44
போட்டோ எடிட் செய்தால் பிரேக்கப் உறுதி
Image Credit : pexels

போட்டோ எடிட் செய்தால் பிரேக்கப் உறுதி

AI மூலம் எழுதப்படும் செய்திகளை ஏற்கும் இந்தியர்கள் புரோபைல் போட்டோ என்று வரும்போது எந்தச் சமரசமும் செய்துகொள்வதில்லை. எந்தவித பில்டரும் இல்லாத, மிகவும் இயல்பான புரோபைல் போட்டோக்களையே 47.9 சதவீத பேர் விரும்புகின்றனர்.

தாங்கள் டேட்டிங் செய்யும் நபரின் புகைப்படம் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டது அல்லது போலியானது (Fake) என்று தெரிந்தால், தங்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்து 40.2 சதவீத பேர் உடனடியாக 'அன்மேட்ச்' (Unmatch) செய்துவிடுகின்றனர்.

'உண்மையான காதல்' மட்டுமே ஜெயிக்கும்

இத்தனை தொழில்நுட்ப மாற்றங்கள் இருந்தாலும், டேட்டிங் விஷயத்தில் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை விடத் தங்களது 'உள்ளுணர்வுக்குத்' தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த சர்வே நிரூபித்துள்ளது. 64.2 சதவீத மக்கள் இன்னமும் ஏஐயை விடத் தங்களது சொந்த புத்தியையும் மனதையும்தான் உறுதியாக நம்புகிறார்கள்.

மொத்தத்தில், இன்றைய இளைஞர்கள் ஏஐ டெக்னாலஜியைத் தங்களது காதல் பயணத்தில் ஒரு 'உதவியாளராக' மட்டுமே பயன்படுத்துகிறார்களே தவிர, அதையே 'காதல்' என்று நினைத்துக் கொள்ளவில்லை. காலம் எவ்வளவோ மாறினாலும், இரண்டு மனங்களுக்கு நடுவே இருக்கும் உண்மையான நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் மாற்று கிடையாது என்பதை இந்த அறிக்கை தெளிவாக உணர்த்துகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toilet Paper In Fridge : பிரிட்ஜுக்குள் டாய்லெட் பேப்பர் வைப்பது ஏன்? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image2
Egg vs Chicken vs Mutton: முட்டை, கோழி, ஆட்டிறைச்சி: இதில் அதிகப் புரதம் எதில் உள்ளது?
Recommended image3
Lizard: வீட்டு பால்கனி பல்லிகளின் புகலிடமா? விரட்டியடிக்க‌ ஈஸியான வழிகள் இதோ!
Related Stories
Recommended image1
Dating: உலகிலேயே 'டேட்டிங்' செய்ய மிகக் குறைந்த செலவாகும் நகரம் டெல்லிதானா? என்னவெல்லாம் ஸ்பெஷல்?!
Recommended image2
அரசு வேலையும் உறுதி... வாழ்க்கை துணையும் ரெடி: இளைஞர்களுக்கு பிரத்யேக டேட்டிங் ஆப் தொடங்கிய சிங்கப்பூர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved