MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த உணவுகளை ஒருபோதும் குக்கரில் சமைக்கக்கூடாது! ஏன் தெரியுமா?

இந்த உணவுகளை ஒருபோதும் குக்கரில் சமைக்கக்கூடாது! ஏன் தெரியுமா?

பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாத சில பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramya s
Published : Sep 20 2024, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pressure Cooker

Pressure Cooker

சமையலறையில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக பிரஷர் குக்கர் உள்ளது. சமையலை வேகமாக எளிதாகவும் செய்ய உதவுவுதால் குக்கர் இல்லை என்றால் இல்லத்தரசிகளுக்கு கை உடைந்தது போல் இருக்கும். காய்கறிகள், பருப்பு ஆகியவற்றை வேக வைக்க பயன்படுவதுடன், பெரும்பாலான பெண்கள் தற்போது குக்கரில் தான் சாதமே வைக்கின்றனர். இன்னும் சிலர் குழம்பு வகைகளை கூட குக்கரில் சமைக்கின்றனர். 

இன்றைய அவசர காலக்கட்டத்தில் சமையல் பணியை விரைந்து முடிக்கவும். சில நிமிடங்களிலேயே சமையலை முடிக்கவும் குக்கர் மிகவும் வசதியான வழியாகும். இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறியாமலேயே பலர் பிரஷர் குக்கர்களில் பலவிதமான உணவுகளைத் தயார் செய்கிறார்கள். பிரஷர் குக்கர் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்ட இந்த சூழலில் கண்டிப்பாக அதில் சமைப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் பிரஷர் குக்கரில் நீங்கள் சமைக்கவே கூடாத சில பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Pressure Cooker

Pressure Cooker

குக்கரில் சில உணவுகளை சமைப்பது பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அது உணவின் சுவையையும் அமைப்பையும் அழிக்கக்கூடும். பிரஷர் குக்கரில் சமைக்கத் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீன்:

பொதுவாக யாருமே மீன்களை குக்கரில் சமைக்கமாட்டார்கள். எனினும் சிலர் சமைக்கக்கூடும். ஆனால் மீன்களை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது. மீன் மிகவும் மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே குழம்பு போன்ற பொருட்களை குக்கரில் சமைக்கும் போது அது அதிகமாகச் சமைக்கும் அபாயம் உள்ளது.

இதனால் மீன்கள் உலர்ந்து அதன் சுவையை இழக்க நேரிடும். கடுமையான வெப்பம் காரணமாக, குக்கரில் மீன் சமைப்பது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் குறைக்கிறது. இது மீனின் கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்கிறது. ஆனால் அதே நேரம் மண் பானை அல்லது நீங்கள் வழக்கமாக குழம்பு வைக்கும் பாத்திரங்களில் மீன்களை சமைப்பதன் மூலம் அதன் சுவையும் ஊட்டச்சத்தும் மாறாமல் இருக்கும்.

35
Pressure Cooker

Pressure Cooker

கீரை: நம்மில் பெரும்பாலானோர் கீரையை குக்கரில் வேக வைப்போம். ஆனால் கீரையை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. பொதுவாக, கீரையை குறைந்த வெப்பநிலையில் சமைக்க வேண்டும். அப்போது கீரையின் சத்துக்கள் மாறாமல் இருக்கும்.. குக்கரில் அதிக வெப்பநிலையில் சிறிது நேரம் வேகவைத்த கீரை அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது. குக்கரில் சமைத்த கீரையை இப்படி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிஸ்தா: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்தாவின் சில நன்மைகளில் மேம்பட்ட கண் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். அதிக வெப்பம் இருப்பதால், குக்கரில் பிஸ்தாவை சமைத்தால் அதிக கொழுப்பு சேரும். அதன் சத்துக்கள் குறையும். உடல் இதற்கு ஒருவிதத்தில் பதிலளிக்கிறது. எனவே ஒருவர் குக்கரைத் தவிர்த்து, சாதாரண பாத்திரத்தில் வேகவைக்க முயற்சிக்க வேண்டும்.

45
Pressure Cooker

Pressure Cooker

காய்கறிகள்: பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, காய்கறிகளில் அதிகம் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அழிக்கப்படுகின்றன. பிரஷர் குக்கரில் அதிக வெப்பத்தில் சமைத்தால் காய்கறிகளில் உள்ள அனைத்து புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். இந்த காரணத்திற்காக, பெரும்பாலான காய்கறிகள் குறிப்பாக இலை கீரைகளை ஒரு தொட்டியில் அல்லது வாணலியில் சமைப்பது விருப்பமான முறையாகும்.

உருளைக்கிழங்கு: நம்மில் பெரும்பாலோர் உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் வேகவைக்கிறோம். உருளைக்கிழங்கில் அரிசியைப் போலவே அதிக அளவு மாவுச்சத்து இருக்கிறது.  உருளைக்கிழங்கு அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது அதன் மாவுச்சத்தை இழக்கிறது. கூடுதலாக, கொதிக்கும் உருளைக்கிழங்கில் அதிக செறிவூட்டப்பட்ட ஆன்டி-ன்யூட்ரியண்ட்கள் உள்ளன, இது உடலுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. அதனால்தான் அவற்றை வேகவைப்பது அல்லது பிரஷர் குக்கரில் சமைப்பது நல்ல யோசனையல்ல.

55
Pressure Cooker

Pressure Cooker

அரிசி: முன்பெல்லாம் சாதத்தை வடித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது பெரும்பாலோனோர் சாதத்தை குக்கரில் வைத்து சாப்பிடுகின்றனர். எனவே அரிசியை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்த நீங்கள் யாரேனும் இருந்தால் அதைக் கைவிட வேண்டிய நேரம் இது. இதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பை உடனடியாக சேமித்து வைக்கும்.

குக்கரில் அரிசியை சமைக்கும் போது மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இரசாயனம் உருவாகிறது. அரிசியின் ஸ்டார்ச் செறிவு அபாயகரமான இரசாயனமான அக்ரிலாமைடு உமிழ்வுக்கு வழிவகுக்கும். இது சில உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் முடிந்தவரை இதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். சாதம் வடிக்கும் பாத்திரத்தில் அரிசியை சேர்த்து வடித்து சாப்பிடுவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(10.2 ov)112/3
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved