MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்றும் '6' பானங்கள்!!

வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்றும் '6' பானங்கள்!!

Hydrating Beverages : குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க உதவும் 5 ஸ்பெஷல் பானங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 02 2025, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Drinks for healthy skin in tamil

Drinks for healthy skin in tamil

பொதுவாக குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக தோலில் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக தோல் வறண்டு காணப்படும் மற்றும் உயிரற்றதாக இருக்கும். மேலும் குறைந்த அளவு தண்ணீர் குடித்தாலும் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தால் தோலில் அரிப்பு, நீட்சி, மற்றும் மெல்லிய திட்டுகள் வருவது பொதுவானது. எனவே இதை தடுக்க சூடான நீரில் குளிப்பது, மாய்ஸ்சரைசர் தடவுவது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனுடன் சில ஸ்பெஷல் பானங்கள் குடிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க முடியும் மற்றும் சருமமும் பளபளப்பாக இருக்கும். இத்தகைய
சூழ்நிலையில், குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைக்க வேண்டிய சில ஸ்பெஷல் பானங்கள் பற்றி இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Winter skin care in tamil

Winter skin care in tamil

எலுமிச்சை மற்றும் தேன்:

குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்ற எலுமிச்சை பழம் மற்றும் தேன் கலந்த நீரை குடிக்க தொடங்குங்கள். ஏனெனில் எலுமிச்சை வைட்டமின் சி யின் நல்ல ஆதாரமாகும். எனவே சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் சருமம் ஹைட்ரேட் செய்வது மட்டுமின்றி, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்.

கற்றாழை சாறு:

கற்றாழை சாற்றை குளிர்காலம் அல்லது கோடைகாலம் என எந்த பருவத்திலும் குடிக்கலாம். ஏனெனில் இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி கரைகளையும் நீக்க உதவுகிறது. முக்கியமாக கற்றாழை சாற்றை தினமும் குடித்து வந்தால் சரும ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, உடலில் பல பிரச்சனைகளும் சரியாகும்.

இதையும் படிங்க:  இதை ட்ரை பண்ணுங்க! எந்த க்ரீமும் இல்லாமலே உங்க முகம் பளபளன்னு மின்னும்!

34
Hydrating beverages for skin in tamil

Hydrating beverages for skin in tamil

கிரீன் டீ:

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க பால் டீக்கு பதிலாக க்ரீன் டீ குடிக்க பழகுங்கள். இது சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கும் பல நன்மைகளை வாரி வழங்கும். ஏனெனில் இதில் போதுமான அளவு ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது சருமத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, எடை இழப்புக்கும் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் தண்ணீர்:

பொதுவாக குளிர்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்று சொல்வார்கள் ஆனால் தேங்காய் நீர் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே இதை உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி, உங்களது உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் முகத்தில் தேன் தடவுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!

44
Antioxidant-rich drinks for skin in tamil

Antioxidant-rich drinks for skin in tamil

மஞ்சள் கலந்த பால்:

மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்திற்கு உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறையும் மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸில் இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல், சருமத்தை ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved