MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இளம் தாய்மார்களே... குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான 5 விஷயங்கள்..! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!

இளம் தாய்மார்களே... குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான 5 விஷயங்கள்..! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!

10 மாதம் கருவில் சுமந்து, பிரசவ வலியில் துடித்து ஒரு குழந்தையை தாய் பெற்றெடுத்தாலும்... குழந்தையை பிரசவித்த சில நிமிடங்களில் அவள் பட்ட அதனை கஷ்டங்களும், வலிகளும் குழந்தை முகத்தை கண்டதும் காணாமல் போய் விடும். இப்படி பெற்றெடுத்த குழந்தையை வளர்க்க நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 06 2022, 11:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குழந்தை பிறந்த இரண்டு மாதம் வரை தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவது... தூக்கமின்மை, உடல்வலி, சோர்வு, போன்ற பிரச்சனைகளால் தான். சிலருக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அது போன்ற சமயங்களில் குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் இளம் தாய்மார்களுடன் இருப்பது மிகவும் முக்கியம்.

26

சரி குழந்தை வளர்ப்பிலும், சில முக்கிய விஷயங்கள் உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காண்போம்... 'குழந்தை பிறந்த பின் சில மாதங்களுக்கு அடிக்கடி குழந்தை மருத்துவரை அணுகி, குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் மருத்துவர்களின் அறிவுரை படி, குழந்தைகளுக்கு, பசும் பால், கிரேப் வாட்டர், போன்றவற்றை ஒரு போதும் கொடுக்காதீர்கள். 

வெளியேற வேண்டும் கமலிடம் அடம்பிடித்த ஆயிஷா! சற்று முன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் இவர் தான்

36

பிறந்த குழந்தைகளுக்கு தாய் பால் மட்டுமே கொடுப்பது நல்லது. குழந்தைகள்... மிகவும் குறைவான பால் தான் குடிப்பார்கள், எனவே அடிக்கடி பசி எடுக்க கூடும்... ஆகையால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைக்கு தாய் பால் புகட்ட வேண்டும். தாய் பால்... சுரப்பு இல்லாத பட்சத்தில் உங்கள் மருத்துவரை அணுகி... ஃபார்முலா மில்க் கொடுக்கலாமா? என்பதை கேட்டு அறிந்து கொள்ளவும். ஒரு போதும் பசும் பால் 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.
 

46

தூக்கம்... என்பது குழந்தைக்கு மட்டும் அல்ல தாய்மார்களுக்கும் மிகவும் முக்கியம். சில குழந்தைகள்... பகலில் தூங்கினால், இரவில் தூங்க மாட்டார்கள். இரவில் தூங்கினால், பகலில் தூங்க மாட்டார்கள். இப்படி பட்ட நேரங்களில், குழந்தை தூங்கும் நேரத்தில் தாய்மார்கள் கிடைக்கும் நேரத்தில் தூங்கி எழுவது அவர்களின் சோர்வை போக்கும்.

Ajith Thunivu: அட்ராசக்க... மலேசியாவில் தூள் பறக்கும் 'துணிவு' பட புரமோஷன்..! மாஸ் காட்டும் ரசிகர்கள்..!
 

56


குழந்தைக்கும் - தாய்க்குமான பிணைப்பு மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையால் உங்களிடம் பேச முடியாதே தவிர, நீங்கள் தொடும் உணர்வை உணர முடியும். நீங்கள் குழந்தையை சந்தோஷமாக தொட்டு... தழுவி, அரவணைக்கும் போது... தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் முடிந்தவரை மகிழ்ச்சியாக குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.
 

66


குழந்தைகளை கையாளுவதில் அதிக கவனம் செலுத்துங்கள். குழந்தைகளை தொடும் போது கைகளை நன்கு கழுவிய பின்னரே தொட வேண்டும். சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். அதே போல் குழந்தை பிரசவித்த பெண்கள்,  நகங்களை நறுக்கி சுத்தமாக வைத்து... அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது குழந்தைகளுக்கு நல்லது.

மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved