MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உலகின் மிகவும் அழகான கிராமங்கள்! பசுமை சுற்றுலாவுக்கு சூப்பரான ஐடியா!

உலகின் மிகவும் அழகான கிராமங்கள்! பசுமை சுற்றுலாவுக்கு சூப்பரான ஐடியா!

பிஸியான பெருநகரத்திலிருந்து விலகி இருக்கும் அமைதியான கிராமங்ககளின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள கிராம சுற்றுலாவுக்குச் செல்வது இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீங்கள் பார்க்கவேண்டிய இந்தியாவின் அழகிய கிராமங்கள் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
SG Balan
Published : Nov 28 2024, 12:25 PM IST| Updated : Nov 28 2024, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
most beautiful villages in India

most beautiful villages in India

அழகிய கிராமங்கள்: இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வசீகரிக்கும் இயற்கைக்காட்சி கொண்டவை. நகரங்களை விட கிராமங்களில் இயற்கை அழகுகளை அதிகமாக ரசிக்க முடியும். பிஸியான பெருநகரத்திலிருந்து விலகி இருக்கும் அமைதியான கிராமங்ககளின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள கிராம சுற்றுலாவுக்குச் செல்வது இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீங்கள் பார்க்கவேண்டிய இந்தியாவின் அழகிய கிராமங்கள் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

26
Malana, Himachal Pradesh

Malana, Himachal Pradesh

மலானா, இமாச்சல பிரதேசம்: பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலானா, இமயமலையின் காட்சிகள் மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்காகப் புகழ்பெற்றது. 'தபூஸ் கிராமம்' என்று புகழ்பெற்ற மலானாவின் மக்கள் இன்னும் பழங்கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். வெளியாட்களுடன் அதிகமான தொடர்பு கொள்வதில்லை. மலையேற்றப் பாதைகளுக்கு அருகில் இருக்கும் அவர்களின் விசித்திரமான கல் வீடுகளும் மொட்டை மாடி வயல்வெளியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்பவை.

36
Ziro Valley, Arunachal Pradesh

Ziro Valley, Arunachal Pradesh

ஜிரோ பள்ளத்தாக்கு, அருணாச்சல பிரதேசம்: ஜிரோ பசுமையான நெல் வயல்களால் சூழப்பட்ட ஒரு அழகிய கிராமமாகும். அபதானி பழங்குடியினரின் தாயகமான இந்த கிராமம் தனித்துவமான விவசாய நுட்பங்கள் மற்றும் ஜிரோ இசை விழா போன்ற திருவிழாக்களின் மூலம் பிரபலமானது. குளிர்ச்சியான சூழலில் இருக்கும் இந்த கிராமம் அமைதியை நாடும் பயணிகளை ஈர்க்கிறது.

46
Kibber, Spiti Valley

Kibber, Spiti Valley

கிப்பர், ஸ்பிட்டி பள்ளத்தாக்கு: 4,270 மீ உயரத்தில் அமைந்துள்ள கிப்பர் என்ற கிராமம், வாகனம் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான கிராமங்களில் ஒன்றாகும். கரடுமுரடான மலைகளால் சூழப்பட்ட கிப்பர் கிராமம், கனவுக்காட்சியைப் போன்ற தோற்றதைத்க் கொண்டது. பனிச்சிறுத்தைகள், இமாலய ஐபெக்ஸ் போன்ற அபூர்வ வனவிலங்குகள் இங்கு வசிக்கின்றன. இது இயற்கை ஆர்வலர்களுக்கு புகலிடமாக அமைகிறது.

56
Khimsar, Rajasthan

Khimsar, Rajasthan

கிம்சார், ராஜஸ்தான்: தார் பாலைவனத்தின் விளிம்பில் அமைந்துள்ள கிம்சார் கிராமம் மணல் திட்டுகளை அழகை ரசிக்க தலைசிறந்த இடமாகத் திகழ்கிறது.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிம்சார் கோட்டை, இப்போது ஹோட்டலாக உள்ளது. இந்த கிராமம் ஒட்டக சவாரி, நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான சூரிய அஸ்தமன காட்சிக்காக பெயர் பெற்றது. மறக்க முடியாத பாலைவன அனுபவத்தை வழங்கும் கிராமம் கிம்சார்.

66
Mawlynnong, Meghalaya

Mawlynnong, Meghalaya

மாவ்லின்னாங், மேகாலயா: 'ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்' என அழைக்கப்படும் மவ்லின்னாங் கிழக்கு காசி மலைகளில் உள்ள ஒரு அழகிய கிராமம். மூங்கில் குடிசைகள் அணிவகுக்கும் தெருக்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் சுற்றுச்சூழலுடன் பிணைந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கிறார்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பயணம்
சுற்றுலா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved