- Home
- Lifestyle
- Breast Milk : தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் 5 அற்புத உணவுகள்...கட்டாயம் பின்பற்றுங்கள்...
Breast Milk : தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் 5 அற்புத உணவுகள்...கட்டாயம் பின்பற்றுங்கள்...
Breast Milk Increase Tips: தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் 5 அற்புத உணவுகள்...தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்போதும் நிபுணர்களின் ஆலோசனைப்படி, சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுளளது.

breast milk
இன்றைய நவீன காலத்து பெற்றோரிடம் தாய்ப்பால் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க வாழ்க்கை முறை மாற்றம் மட்டும் போதாது சிறப்பான உணவு முறைகள் அவசியம். தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் அந்த அற்புத உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்த்து கொள்வோம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்போதும் நிபுணர்களின் ஆலோசனைப்படி, சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுளளது.
breast milk
பூண்டு மற்றும் வெங்காயம் :
தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதிகம் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
breast milk
கீரைகள்:
கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக, முருங்கை கீரை:
முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை இலையை சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி உப்பு சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். இது தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, முருங்கை கீரையை வேகவைத்து பாசிபருப்பும் சேர்த்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் தாயும், சேயும் நலமுடன் இருக்கலாம்.
breast milk
பால்:
பால் இயற்கையிலேயே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இந்த இயற்கை ஊட்ட உணவு, தன்னுள் வைத்திருக்கும் சங்கதிகள் ஏராளம். ஒரு தாய் நோயுற்ற நிலையிலும்கூட தன் குழந்தைக்கு பால் தர முடியும். எனவே, குழந்தை பெற்றெடுத்து பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பசும் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் சுரக்கும்.
breast milk
வெந்தயம்:
பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயம் சிறப்பான உணவு பொருள் ஆகும். வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கவும். இது தவிர ஊறவைத்த வெந்தயத்தை அரிசி மற்றும் பாலுடன் சமைத்து சாப்பிடவும்.