இரவு தூக்கம் ‘நிம்மதியா’ இருக்கணுமா? அப்போ இந்த 5 உடைகள் தான் பெஸ்ட்!
இரவில் நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நாம் சாப்பிடும் உணவு, படுக்கும் மெத்தை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நாம் அணியும் உடை. உடலை இறுக்காமல், காற்றோட்டமாக வைத்திருக்கும் ஆடைகளே தூக்கத்தின் தரத்தை உயர்த்தும்.

காட்டன் பஜாமாவும் டீ-சர்ட்டும்
கோடைகாலமோ, குளிர்காலமோ... நம் ஊர் வெயிலுக்கு 100% தூய பருத்தி (Cotton) ஆடைகளை அடிச்சுக்க முடியாது. காற்றோட்டமான லூஸ் ஃபிட் பஜாமா மற்றும் காட்டன் டீ-சர்ட் உடலுக்குக் குளிர்ச்சியையும், அசாத்திய நிம்மதியையும் தரும்.
சாஃப்ட் லினன் ஆடைகள்
இரவில் அதிகமாக வியர்க்கும் உடல் தன்மை கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு லினன் (Linen) உடைகள் தான் பெஸ்ட் சாய்ஸ். இது சருமத்திற்கு சுவாசிக்கும் தன்மையைக் கொடுப்பதுடன், நள்ளிரவில் வியர்த்து தூக்கம் கலைவதைத் தடுக்கும்.
சில்க் அல்லது சாட்டின் நைட்வேர்
தூங்கும் போது ஆடம்பரமாக உணர்வது மட்டுமல்ல, சாட்டின் (Satins) மற்றும் சில்க் உடைகள் சருமத்தின் மீது மிகவும் மென்மையாக இருக்கும். படுக்கையில் புரண்டு படுக்கும் போது உராய்வு (Friction) ஏற்படாமல், சுகமான தூக்கத்தைத் தரும்.
மூங்கில் நார் ஆடைகள்
இது முற்றிலும் புதிய சாய்ஸ்! மூங்கில் நாரில் இருந்து தயாரிக்கப்படும் உடைகள் (Bamboo Fabric) பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்டவை. அலர்ஜி அல்லது சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும்.
லூஸ்-ஃபிட் நைட்டிகள் மற்றும் காஃப்தான்கள்
பெண்களுக்கு எப்போதும் ஃபேவரிட் நைட்டிகள் தான். ஆனால், இப்போது ட்ரெண்டில் இருக்கும் 'காஃப்தான்' (Kaftan) ரக ஆடைகள் உடலை எங்குமே அழுத்தாமல், மிகத் தளர்வாக இருக்கும். பட்டன்கள், ஜிப்பர்கள் இல்லாத நைட்டிகளைத் தேர்ந்தெடுப்பது கூடுதல் சௌகரியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

