குழந்தைகள் பார்க்குறப்ப பெற்றோர் செய்யக் கூடாத '4' மோசமான விஷயங்கள்!!
Parenting Tips Tamil : குழந்தைகள் முன்பு பெற்றோர் தவிர்க்க வேண்டிய 6 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
parenting tips in tamil
பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள். அதனால் பெற்றோர் தாங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு செயலும் குழந்தைகளுடைய நடத்தையில் வெளிப்படத் தொடங்கும். அவர்கள் பேசும் வார்த்தை, நடந்து கொள்ளும் விதம், அவர்கள் உடை என எல்லாவற்றிலும் குழந்தைகளின் ஆளுமை அடங்கி இருக்கிறது. பெற்றோர்தான் குழந்தைகளுடைய முன்மாதிரியானவர்கள்.
parenting mistakes in tamil
பெற்றோரின் நடத்தையில் இருந்து தான் குழந்தைகள் அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரின் கெட்டப் பழக்கங்களை குழந்தைகள் காண்பதால் தவறான வழியில் நடக்கத் தொடங்குகிறார்கள். இதை தவிர்க்கும் நோக்கில் இங்கு குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்களை காணலாம்.
இதையும் படிங்க: டீனேஜ் பிள்ளைக்கு பெற்றோர் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' முக்கிய விஷயங்கள்
parenting mistakes to avoid in tamil
கோபம் காட்டாதீர்கள்:
உங்களுடைய குழந்தைகளுக்கு முன்பு கோபத்தை மீண்டும் மீண்டும் காட்டக்கூடாது. நீங்கள் அடிக்கடி கோபப்பட்டு கத்தினால் அவர்கள் உங்களுடைய கோபத்தை கண்டுகொள்ளமாட்டார்கள். நீங்கள் எப்படி அவர்களிடம் கோபமாக நடந்து கொண்டீர்களோ அதே மாதிரி தான் அவர்களும் உங்களுக்கு பதில் உரைப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் பெற்றோர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருப்பது அவசியம்.
தவறான வார்த்தை உபயோகம்:
சின்ன குழந்தைகள் எந்த புதிய விஷயங்களையும் விரைவில் கற்றுக் கொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருமே நல்ல வார்த்தைகளை தான் பேச வேண்டும். கெட்ட வார்த்தைகளை பேசி சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கும் வாய்ப்புள்ளது. பெற்றோராகிய உங்களுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருந்தாலும் குழந்தைகள் முன்னால் அது குறித்து பேசி சண்டை, சச்சரவு செய்யக்கூடாது
இதையும் படிங்க: குழந்தை உங்க கிட்ட நேர்மையா இருக்கனுமா? இந்த '5' தப்ப மட்டும் பண்ணாதீங்க!
நீங்கள் சரியாக இருந்தால்..
பெட்ரூம் சரியாக இருந்தால் குழந்தைகளும் சரியாக வளருவார்கள். உங்களுடைய நல்ல பழக்கங்களை தான் குழந்தைகளும் பார்த்து பழகுவார்கள். நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்து எல்லா வேலையும் சரியாக செய்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள். நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் உங்களுடைய குழந்தைகளும் உங்களை பார்த்து ஒழுக்கமாக வளருவார்கள்.
பொய் சொல்லாதீர்கள்!
குழந்தைகள் முன்பு பொய் சொல்லாதீர்கள் நீங்கள் பொய் சொல்வதை ஒரு பழக்கமாக கொண்டிருந்தால் அவர்களும் போய் சாதாரணமாக விஷயமாக கருதி விடுவார்கள் அது தவறு என்று அவர்களுக்கு புரியாது குழந்தைகள் முன்பு நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்வது அவசியம்.