தினமும் காலை '4' மந்திரங்கள்.. நினைத்ததை பெற ஹவாய் மக்களின் 'அற்புத' பாரம்பரியம்!!
Mantras For Success And Happiness : வாழ்வில் வெற்றி பெற, நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்க ஹவாய் மக்கள் பயன்படுத்திய 4 மந்திரங்களை இங்கு காணலாம்.

தினமும் காலை '4' மந்திரங்கள்.. நினைத்ததை பெற ஹவாய் மக்களின் 'அற்புத' பாரம்பரியம்!!
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கும். கஷ்டப்பட்டு உழைப்பதும், பணம் சேர்க்க நினைப்பதும் எல்லாவற்றிற்கும் மைய புள்ளி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பதுதான். ஆனால் என்ன செய்தாலும் சிலரால் தான் நிம்மதியாக இருக்க முடிகிறது. ஏதோவொன்று குறையும். மனம் புலம்பி தவிக்கும். சில நேரங்களில் என்ன செய்தாலும் மகிழ்ச்சி இல்லாமல் போவதற்கு மனரீதியான பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். எதிர்மறை சிந்தனைகள் உங்களுடைய தன்னம்பிக்கையை சிதைக்கலாம். மகிழ்ச்சியை மட்டுப்படுத்தலாம். உளவியல்ரீதியாக நம்முடைய ஆழ்மனம் தான் பல விஷயங்களுக்கு காரணமாக உள்ளது. ஆழ்மனதின் எண்ணங்கள் தான் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணம்.
ஹோ'ஓபோனோபோனோ
நம் ஆழ்மனதிடம் என்ன சொல்கிறோமோ அதுவே நமக்கு கிடைக்கும். செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் எதுவாக இருந்தாலும் ஆழ்மனம் அதை தரும். ஆனால் ஆழ்மனதில் ஆறாத காயங்கள் இருந்தால் இது சாத்தியமில்லை. ஹவாய் மக்கள் இந்த ஆழ்மனதை சமநிலைப்படுத்த ஒரு விஷயத்தை பின்பற்றினர். அதை தான் Ho'oponopono ஹோ'ஓபோனோபோனோ என்கிறார்கள். இந்த மந்திரம் அல்லது பிரார்த்தனையில் ஆழ்மனதின் காயங்களை குணப்படுத்தலாம். இந்த மந்திரத்தை இங்கு காணலாம்.
தன்னம்பிக்கை:
ஒருவர் தன்னம்பிக்கை குறைவாக காணப்பட்டால் அவருக்கு சுய அன்பு இருக்காது. அதாவது தன்னை தானே நேசிக்காமல் இருப்பார். இதனால் தன்னுடைய தவறுகளை மிகப்படுத்தி பார்ப்பார். தன் வாழ்வில் நடப்பதற்கு எல்லாம் தன் மேலே பழிபோட்டு கொள்வார். ஆனால் தன்னம்பிக்கை உள்ளவரோ எந்த சூழலையும் சமாளித்து முன்னேறிவிடுவார். யாரையும் குறை சொல்லமாட்டார். புலம்பமாட்டார். மகிழ்ச்சியா இருப்பார். இப்படி தன்னம்பிக்கை வர, நம்மை நாமே நேசிக்க ஹோ'ஓபோனோபோனோ பிரார்த்தனை உதவும் என சொல்லப்படுகிறது. ஹாவாய் மக்கள் இதை பாரம்பரியமாக பின்பற்றுகின்றனர்.
ஆழ்மனதின் வெளிப்பாடு:
இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவரும் Manifestation க்கு அடிநாதமே ஆழ்மனம் தான். நாம் மனதை ஒருநிலைபடுத்தி ஆழ்மனதிடம் சொல்லும் விஷயங்களை பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஆழ்மனமும் பிரபஞ்சமும் பேராற்றல் கொண்டது. நாம் முழுமையாக நம்பும்போது அதை பெறுகிறோம். எந்த மதத்தவராக இருந்தாலும் இந்த முறையில் பயன்பெறலாம். நமக்கு வேண்டியதை மனக்கண் முன் காட்சிகளாக நிறுத்தி அதை நாம் பெற்றுவிட்டதாக முழுமையாக நம்புவதே Manifestation. இதற்கு ஆழ்மனதை நாம் தயார்படுத்தி அதன் வழியில் நம்முடைய உழைப்பை செலுத்தவேண்டும்.
இதையும் படிங்க: இந்த 5 குணங்கள் உங்களிடம் இருக்கா? அப்ப நீங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது - சாணக்கியா
நினைத்ததை பெற!
நீங்கள் நினைத்ததை பெற ஆழ்மனம் வழிகாட்டும். ஆனால் ஏற்கனவே ஆழ்மனதில் பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மை உள்ளிட்ட எதிர்மறையான விஷயங்கள் இருந்தால் நினைத்த எதுவுமே நடக்காது. அதனால் அதை சரி செய்ய வேண்டும். இந்நிலை மாறவே ஹாவாய் மக்கள் அந்த நான்கு மந்திரங்களை தினமும் காலை சொல்லி வந்திருக்கிறார்கள். இதை சொல்லும்போது சொல்ல முடியாத மனதில் உள்ள காயங்கள் படிப்படியாக மாறும்.
இதையும் படிங்க: அறிவுள்ளவன் 'இந்த' தவறை ஒருபோதும் செய்யமாட்டான்! சாணக்கியர் சொல்லும் அந்த தவறு என்ன தெரியுமா?
எப்போது, எப்படி சொல்ல வேண்டும்?
காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நின்று சத்தமாக சொல்லவேண்டும். எளிய வார்த்தைகள் தான் ஆனால் இதை மனப்பூர்வமாக சொல்ல பலருக்கு கஷ்டமாக இருக்கலாம். உளவியலாளர் ஒருவர் இது குறித்து பேசும்போது தன்னம்பிக்கை இல்லாத பலர் கண்ணாடியில் பார்க்கவே சிரமப்படுவதாக கூறியுள்ளார். அதனால் இந்த மந்திரங்களை சாதாரணமாக எண்ணாமல் தினமும் காலை 10 தடவை சொல்லிப்பாருங்கள்.
"Sorry - மன்னிக்கவும்
Forgive me - என்னை மன்னித்துவிடு
Thank you -உனக்கு நன்றி
I love you- நான் உன்னை நேசிக்கிறேன் "
இதை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நாள்தோறும் காலை எழுந்ததும் கண்ணாடியில் உங்களை பார்த்து சொல்லுங்கள். இந்த மந்திரம் பார்க்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மன்னிக்கப்படாத, நேசிக்கப்படாத எத்தனையோ காயங்கள் உங்கள் ஆழ்மனதில் அரித்து கொண்டிருக்கலாம். அதை இந்த மந்திரங்கள் குணப்படுத்தும். முயன்று பாருங்கள். பின்னர் நீங்கள் Manifestation செய்யும் அனைத்தும் நிறைவேறும்.